பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுந்தர காண்டம்

237



அவளைக் காண முடியும்’ என்று நம்பிக்கை கொண்டான்; அங்கே மண்டோதரி கண் அயர்ந்து உறங்கிக் கிடந்தாள்; மயன் மகளாகிய மண்டோதரியைச் ‘சனகன் மகள்’ என்று தவறாய் நினைத்தான்; ‘சுகபோக சுந்தரியாக மாறி விட்டாளோ?’ என்று மயங்கினான்; சோர்ந்த குழலும், கலைந்த துயிலும், அயர்ந்த முகமும், ஜீவனற்ற முகப் பொலிவும் அவள் மண்டோதரி என்பதை உணர்த்தின. ‘நலம் மிக்க நங்கை ஒருத்தி மனைவியாய் இருக்க, மற்றொருத்தியை இவன் நாடுகிறானே’ என்று வியந்தான்.

இராவணன் மாளிகை

அடுத்தது அவன் அடைந்தது இராவணன் மாளிகை; அரம்பையர் அவன் அடிகளை வருடிக் கொண்டிருந்தனர். உறக்கம் கலைந்த நிலையில் அவன் காணப்பட்டான். நெருப்பை மடியில் கட்டிக்கொண்டு, அவனால் எப்படி அமைதியாய் உறங்கமுடியும்? சீதையை நெஞ்சில் வைத்தவன், நெருப்பு வைத்த பஞ்சாய் எரிந்து அழிந்துகொண்டிருந்தான்.

அரக்கனைக் கண்ட அனுமன் பதைபதைத்தான்; அவன் பத்துத் தலைகளையும் கிள்ளி எறிந்து, பந்தாட விரும்பினான்; ‘அவனை வென்று சீதையை மீட்பதை விடக் கொன்று முடிப்பதேமேல்’ என்று நினைத்தான்; நின்று நிதானமாய் நினைத்துப் பார்த்தான்; ‘கண்டு வரச் சொல்லி அனுப்பப்பட்டவனே தவிரக் கொண்டு வரச் சொல்லப்பட்டேன் இல்லை’ என்பதை நினைந்தான். ‘எல்லை மீறிய தொல்லைகளை விளைவிப்பது நல்லது