பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

238

கம்பராமாயணம்



அன்று’ என்ற முடிவுக்கு வந்தான்; “இராமன் வீரத்துக்கு விளைநிலம் வேண்டும்” என்பதற்காக அவனை விட்டு வைத்து எட்டிச் சென்றான்.

‘கட்டிய கட்டிடங்களில் சீதை கால்அடி வைக்க வில்லை; என்பதை அறிந்தான்; அவன் சுற்றாத இடமே இல்லை; எட்டிப்பாராத மாளிகை இல்லை; அவனுக்கே அலுப்பு ஏற்பட்டுவிட்டது; ‘சலிப்பதால் பயனில்லை’ என்று பயணத்தை மேலும் தொடர்ந்தான்.

கழுகின் வேந்தனாகிய தொழத் தக்க சம்பாதி என்பான் சொன்ன உறுதிமொழி அவனுக்கு நம்பிக்கை அளித்தது. ‘இலங்கையில்தான் அந்த ஏந்திழையாள் சிறைவைக்கப் பட்டிருக்கிறாள்’ என்று கூறியதில் தவறு இருக்காது, என்ற முடிவுக்கு வந்தான்.

பாய்ந்து ஒடும் அவன் கால்கள் மரங்களையும் மாட மாளிகைகளையும் தாவின. புள்ளினம் பறந்து திரிவதும் பூக்கள் நிறைந்ததும்ாகிய சோலை ஒன்று காணப்பட்டது. காக்கை திரியும் தோற்றம் கண்டு, அவன் சோகம் தீர்க்கும் அசோகவனத்தைக் கண்டான்.

சீதையைக் காணல்

இருளிடை ஒளிவிடும் மின் என, அரக்கியர் சூழ்ந் திருந்த இடத்தில் கவலையில் ஆழ்ந்த நங்கையைக் கண்டான். அதனைக் கண்டு தேவர் ஆரவாரித்தனர். வெற்றி வாசல் வழிதிறந்து காட்டியது. இராமன் அறிவித்த பேரழகு முழுவதும் எங்கும் பெயராது அங்குக் குடியிருந் தமையைக் கண்டான். சித்திரத்தில் தீட்டிய அழகு வடி