பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுந்தர காண்டம்

245



அவனது கோழைத்தனம் என்று சுட்டிக்காட்டினாள், ‘சடாயுவைக் கொன்றது அநீதி, என்று எடுத்து உரைத் தாள்; இராமனை அற்ப மனிதன் என்று சொன்னதற்கு எதிராக அவன் வீரத்தையும், வெற்றிகளையும் விவரமாகக் கூறினாள்.

அரச மகன் என்பதால் இராமனைத் தான் மணக்க வில்லை; ஆற்றல் மிக்க வீரமகன் என்பதால் தான் மணந்து கொண்டதாய்க் கூறினாள்; “வில்லை வளைக்க முடியாமல் பேரரசர் பின்வாங்கிய நிலையில், அதனை வளைத்து அவ்வெற்றியையே தனக்கு மண மாலையாகச் சூட்டினான்” என்பதைச் சுட்டிக்காட்டினாள்.

“செல்வத்தைக் காட்டிச் செருக்கோடு பேசுவது மடமையாகும், என்றாள்; அதனால் தன்னை மருட்டுதல் பயன்தாராது என்றாள்; அறிவு குறைந்தவள் என்று சொல்லித் தன்னை ‘ஏழை’ என்று அவன் சுட்டியதற்கு எதிர்ப்பாய் அவன்தான் ஏழை என்பதனை எடுத்துக் காட்டினாள்.

“அறிவின்மை, வஞ்சகச் செயல், வீரமின்மை, கோழைத்தன்மை இவைதான் ஏழைமையின் சின்னங்கள்; நீதான் ஏழை” என்று ஏழ்மைக்குப் புதுவிளக்கம் தந்தாள்; “செல்வமின்மை ஏழ்மையன்று; அறிவின்மைதான் ஏழ்மை” என்று அறிவித்தாள்.

“தெய்வங்கள் வரம் தருகின்றன என்றால் தவத்துக்கும் ஆற்றலுக்கும் தரப்படுகின்ற மதிப்பு என்று அதனைக் கொள்ள வேண்டும். ‘ஆற்றல் உள்ளவர்க்கு வரம் அளிப்பதால் அவர்கள் உலகுக்கு நன்மை ஆற்றுவர்;