பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

256

கம்பராமாயணம்



நாயகன், நீர் இருக்கும் இடம் அறியாக் குறையே தவிரப் படை எடுக்கத் தடை ஏதும் இல்லை” என்று ஆறுதல் கூறினான்.

“நறுக்கென்று சொல்லத்தக்க நினைவுகளைச் சொன்னால் யான் உங்களைச் சந்தித்தமைக்குச் சிறந்த சான்றுகளாய் அமையும்” என்று கூறினான்.

“இந்திரன் மகன் சயந்தன், எங்கள் ஏகாந்தத்தின் இடை புகுந்து, காக்கை வடிவில் என் யாக்கையைத் தொட்டான்; புல் ஒன்று கொண்டு அப்புள்ளினை விரட்டினான் இராமன்; இந்தச் செய்தியைச் சொல்லுக” என்றாள்.

“காக்கை ஒன்று தொட்டதற்கே அவன் பொறுமை காட்டவில்லை; அரக்கன் ஒருவன் சிறை வைத்திருப்பதை அவனால் எப்படிப் பொறுத்திருக்க முடியும்?” என்ற கருத்தை உண்டாக்க இந்தச் செய்தியை நினைவுப் படுத்தினாள்.

“எல்லாம் விதியின் செயல்” என்று எண்ணிப் பெரு மூச்சு விடும் அவள், இத் துன்பங்களுக்கெல்லாம் காரணம் யார்? என்று எண்ணிப் பார்த்தாள்.

“மாமியார் செய்த கொடுமை” என்பதைச் சொல்லாமல் சொல்லி அனுப்புகிறாள்.

“அன்பாக வளர்த்து வந்த தன் கிளிக்கு யார் பெயர் இடுவது?” என்று இராமனைக் கேட்க, அவன், தான் நேசித்து வந்த மதிப்புமிக்க அன்னை கேகயன் மகள் பெயரை வைக்கும்படி கூறியதை நினைவுப்படுத்தினாள்.