பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

258

கம்பராமாயணம்



தேர் இப் படைகள் இருந்த கொட்டில்களை எட்டி உதைத்து, அழிவு செய்தான்; வேள்வி மண்டபங்கள் வேதியர் இல்லாமலேயே நெருப்பு களைக் கக்கின. யார் இது செய்தது? என்ற கேள்விகள் எழும்படி அரக்கர் அழிவுகளைச் சந்தித்தனர். சீதைக்குச் சோகம் விளைவித்த அசோகவனம், எரிதழலுள் வைகியது; அதனைக் காவல் செய்த பருவத் தேவர் உருக்குலைந்து ஓடினர்; சித்திர நகரின் எழில் சிதைந்து போனது; அரக்கர் அழிவு கண்டு ஒலமிட்டனர்; இராவணனிடம் சென்று முறையிட்டனர்.

கிங்கரர் வளைத்தல்

செய்தி அறிந்து, செல்வக் கோமான் இராவணன், கிங்கரரை அழைத்து அவனை வளைக்குமாறு ஏவினான். தோரண வாயிலில் இருந்த கணைய மரத்தைக் கொண்டு கிங்கரரைத் தாக்கினான்; அவர்கள் உயிரைப் போக்கினான்.

சம்புமாலி என்ற படைவீரன் அனுமனை அணுகினான்; அவன் படையுடன் அழிந்து இடம் தெரியாமல் மறைந்தான்; “பஞ்ச சேனாதிபதியர்” என்ற படைத்தலைவர் அவனிடம் மோதிப் பஞ்சாய்ப் பறந்தனர். இராவணன் இளைய மகன், அக்ககுமரன் களம் நோக்கிக் கால் வைத்தான்; அவன் படைகள் அக்கு வேறு ஆணி வேறாய்ச் சிதைந்தன; அனுமன் அவனைக் காலால் தரையொடு தரையாய்த் தேய்த்தான். அவனும் வீரமரணம் அடைந்தான்.

அக்ககுமரன் இறந்த செய்தி மண்டோதரியைக் கையறு நிலை பாட வைத்தது; ஒப்பாரி வைத்து அழவைத்தது, இராவணன் கடுஞ்சினம் கொண்டான்; தம்பி