பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுந்தர காண்டம்

259



இறந்த செய்தி கேட்டு இந்திரசித்து, மிக்க சீற்றம் கொண்டான்; போர்மேற் சென்றான்; அவன் தேர் தரையோடு தரையாயிற்று; படைகள் இழந்து பார் வேந்தன் மகன் தன் கையில் இருந்த மந்திர வலிமை வாய்ந்த பிரமாத்திரத்தை ஏவினான்; அதன் மந்திர சக்திக்கு ஆட்பட்டு அனுமன், அடங்கிக் கட்டுண்டான்; கட்டுண்டான் என்பதை விடக் கட்டுப்பட்டான் என்பதே பொருத்தம்; அடங்கியவன் போல் நடித்தான்.

நடிப்பு வெற்றி தந்தது; நாலு தெருக்கள் வழியே அவனை இழுத்துச் சென்றனர். “அவனைக் கொல்லாமல் இழுத்து வருக” என்று இராவணன் ஆணையிட்டான்.

இராவணனை அவன் அத்தாணி மண்டபத்தில் நேருக்கு நேர் சந்தித்தான்; அநுமன் அவனைக் காணும் வாய்ப்புக்கு அகமகிழ்ந்தான்; அவனைக் கொல்வதற்கும் வெல்வதற்கும் இராமன் ஒருவனால்தான் முடியும் என்பதைக் கண்டான்; விரைவில் விடுபட்டு இராமனுக்குச் செய்தி சொல்ல விரும்பினான்; அத் திரத்தை முறித்துக் கொண்டு வெளிவருவது வேத விதிக்கு முரணாகும்; அதனால் பொறுத்திருந்தான்;

“கட்டுண்டோம் காலம் வரும்” என்று காத்திருந்தான்.

“தூதுவனாய் வந்த நீ துயர்விளைவிக்கும் அழிவினை ஏன் செய்தாய்?” என்று இலங்கையர் கோன் கேட்டான்.

“கட்டுக் காவல் மிக்க உன்னைச் சந்திக்க, இதுதான் வழி எனக் கண்டேன்; அரச மரியாதையுடன் உன் ஊர்ப்