பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுந்தர காண்டம்

261



மந்திரத்தின் கட்டு அவனைவிட்டு நீங்கியது. மாந்தரின்கட்டு அவனைக் கட்டியது; வீதிதோறும் அவன் இழுத்துச் செல்லப்பட்டான்; அப் பொன்ன கரின் எழிலும் பரப்பும் அவன் காண முடிந்தது.

நகரத்தின் நடுப்பகுதியில் அவனை நிற்க வைத்தனர், அவன் வாலுக்குத் துணிசுற்றி அதில் நெருப்பு வைத்தனர்.

சீதைக்கு இச்செய்தி எட்டியது; அவள் அங்கியங் கடவுளை அவனிடம் தணிந்து நடக்குமாறு வேண்டினாள்; அவன் அதற்குப் பணிந்து அவனுக்கு ஊறு விளைவிக்கவில்லை; அனுமன் ஊருக்குத் தீ வைத்தான்; இலங்கை பற்றி எரிந்தது.

“சுட்டது குரங்கு, கெட்டது “கடிநகர் என்ற செய்தி எங்கும் பரவியது; பற்றுதிர்; அவனை எற்றுதிர் என்று இராவணன் இட்ட ஏவலால் அவனை வீரர் தொடர்ந்தனர்.

சீதை தங்கி இருந்த இடத்துக்கு நெருப்புச் செல்லவில்லை; கற்பின் பொற்பு அவளுக்கு அரணாய் அமைந்தது; “அநுமன் குறையின்றிச் சேர வேண்டுமே, என்று தெய்வங்களிடம் முறையிட்டாள். பவழமலை யிலிருந்து சென்று மைந்நாக மலைக்குத் தாவினான்; அங்கு அதன் விருந்தினனாய்க் களைப்பு ஆறினான். அங்கிருந்து மகேந்திர மலைக்குத் தாவினான்.

செய்தி சொல்லல்

அனுமனைக் கண்ட வானர வீரர், உவகை கொண்டனர்; ஆரவாரம் செய்து, கடல் ஒலியைக் கரையில்