பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுந்தர காண்டம்

263



“'சீதை மண்மகள் தந்த மாமகள்; அவள் விண்மகளிரையும் உயர்த்திவிட்டாள்” என்றான். ‘பெண்ணினத்துக்கே அவளால் பெருமை சேர்ந்துவிட்டது’ என்று கூறினான்.

“சோகத்தாளாய நங்கை கற்பினாள் தொழுதற்குஒத்த மாகத்தார் தேவிமாரும் வான்சிறப்பு உற்றார்; மற்றைப் பாகத்தாள் அல்லள் ஈசன், மகுடத்தாள்; பதுமத்தாளும் ஆகத்தாள் அல்லள்; மாயன் ஆயிரம் மோலி மேலாள்”

என்று கூறினான்.

கணையாழி கொடுத்ததைப் பெற்றுக்கொண்டு அவள் உள்ளம் குளிர்ந்ததை எடுத்துக் கூறினான்; அவ்வாறே அவள் தந்து அனுப்பிய சூடாமணியை இராமன் கையில் தந்தான்;

“விற்பெரும் தடந்தோள் வீர!
வீங்கு நீர் இலங்கை வெற்பில்
நற்பெரும் தவத்தள் ஆய
நங்கையைக் கண்டேன் அல்லேன்;
இற்பிறப்பு என்பது ஒன்றும்
இரும்பொறை என்பது ஒன்றும்
கற்பெனப் படுவதொன்றும்
களிநடம் புரியக் கண்டேன்”

என்றான். (அருகிலுள்ள படத்திலுள்ளது தவறு. ´கற்பெனப் படுவதொன்றும்` என்பதுதான் சரியானது.)

இராமன் உள்ளம் பூரித்தான்; உவகைக்கு எல்லை இல்லை; அந்த மகிழ்ச்சியில் அவன் ஆழ்ந்து போகாமல் சுக்கிரீவன் செயல்பாட்டுக்குத் துண்டிவிட்டான்.