பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/278

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

278

கம்பராமாயணம்



வேடத்தைக் கலைத்தான்; பூசி இருந்த வண்ணக் கலவை நீங்கியது: மை நிறத்து அரக்கராய் வெளிச்சத்தில் வைக்கப்பட்டனர்; அவர்கள் மெய்யைக் காட்டிய பிறகு, ‘தாம் யார்?’ என்ற மெய்யை உரைத்துவிட்டனர்; தாம் அரக்கர் என்பதை இராமனிடம் கூறி, இரக்கம் காட்டும்படி வேண்டினர்.

தூதுவர்க்கு உரிய மரியாதையை இராமன் அவர்களுக்குக் காட்ட விரும்பினான்; தீய சிந்தை யரைக் காட்டும் போது விழும் தரும அடிகள், அவர் களை அணுகவில்லை; “'மறைந்திருந்து மறைகளை அறிந்து சொல்ல வேண்டிய தேவையில்லை; நிறைந் திருந்து இங்குள்ள நிறை குறைகளை எண்ணிக்கை விடாமல் தெளிவாய் அறிவிக்கலாம்” என்றான் இராமன்.

“எங்கள் வீரத்தை எடுத்து விளம்ப எங்களுக்கு நீங்கள் தொடர்பேசியாய் இருப்பீர், என்று எதிர் பார்க்கிறேன்; அஞ்சாமல் சொல்லலாம்; நாங்கள் நேரில் சொன்னால் உம் தலைவன் நம்பமாட்டான்; அறிந்து வந்து அறிவித்தால் அதற்கு ஆதிக்கம் அதிகம்” என்று சொல்லி அனுப்பினான்.

“தப்பியது இராமபிரான் புண்ணியம்” என்று தலைகாட்டாமல் வந்தவழி நீட்டினர். செய்திகொண்டு சென்ற சேவகர் தாம் ஒற்றி அறிந்து கற்றுவந்ததை முற்றுமாக இராவணனுக்கு உரைத்தனர்; கடல் கடந்த அக்கரைச் சீமையில் போர்ப்பயிற்சி பெற்ற சேனை களைப் பற்றியும், இராமன் தோற்றத்தில் தாம் கண்ட ஏற்றத்தைப் பற்றியும், சரண் அடைந்து சாதியை மறந்து நீதிக்காகப்