பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/280

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

280

கம்பராமாயணம்



ஏக்கத்தால் மெலிந்து விட்ட தோள்கள், போர்ச் செய்தி கேட்டுப் பூரித்து வீங்கின. அவனுக்கு இராமனை அடையாளம் காட்டத் தேவை இல்லாமல், அவன் எழில்நிறை தோற்றம், அவனை யார் என்பதை அறிவுறுத்தியது; காமனும், தானும் முறையே கரும்பு வில்லையும், இரும்பு வாளையும் எறிந்து விட்டுத் தலைகுனிய வேண்டும் என்பதை உணர்ந்தான்.

அவ்வாறே வீடணனைக் கொண்டு இலங்கைப் படை வீரர்களை இராமன் அடையாளம் கண்டான். சுக்கிரீவன் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டான். சீதையின் முடிவில்லாத் துயருக்குக் காரணம் இராவணன், அவன்தான் என்பதை அவன் கண்டு கொண்டான். நாயைக் கண்டால் கல்லெடுத்து எறிய விரும்பும் சிறுவர் போல் அவசரப்பட்டு, அவன் இராவணன்மீது பாய்ந்தான். அது நாட்டுநாய் என்று நினைத்தான்; அது வேட்டை நாய் என்பதை அவன் அறியவில்லை; அது அவனைக் கடித்துக் குதறி விட்டது; தப்பித்தால் போதும் என்று அவன் தன் தவிப்பை வெளியிட்டான்; இராமன் தான் தன் இனிய துணைவனை இவ்வளவு விரைவில் இழப்பான் என்று சிறிதும் எதிர்பார்க்கவில்லை; நண்பனை இழந்தபின் அன்புடைய மனைவியை அடைவதில் அவன் மனம் ஈடுபடவில்லை.

வாணர வேந்தன் உயிர் பிழைத்து வர வேண்டுமே என்ற கவலை அவனை வாட்டியது; இராவணன் பேராற்றல் உடையவன்; முன்பின் யோசனை செய்யாமல் நெருப்பில் கைவிடும் சிறுகுழந்தைபோல் சுக்கிரீவன் செயல்பட்டுவிட்டான் என்று வருந்தினான். இருந்தாலும்