பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/294

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

294

கம்பராமாயணம்



இதற்கு மேலும் அவனை வற்புறுத்திப் பயன் இல்லை என்பதை வீடணன் அறிந்தான். இறுதியில் கும்பகருணன், “நடப்பது நடந்துதான் தீரும். விதியைக் கடப்பது அரிது” என்று ஒரு தத்துவக் கோட்பாட்டினை உரைத்தான்.

“ஆகுவது ஆகும் காலத்து; அழிவதும் அழிந்து சீந்திப்
போகுவது அயலே நின்று போற்றினும் போதல் திண்ணம்;
சேகுஅறத் தெளிந்தோர் நின்னில் யார்உளர்? வருத்தம் செய்யாது,
ஏகுதி, எம்மை நோக்கி இரங்கலை என்றும் உள்ளாய்”

என்று கூறி வாழ்த்தி அனுப்பினான்.

‘என்றும் உள்ளாய்’ என்பது வாழ்த்தாகவும் எள்ளும் நகையாகவும் அமையக் கூறினான் கும்ப கருணன்.

உடன்பிறப்பு என்னும் பாசத்துக்கு ஒரு முழுக்குப் போட்டுவிட்டு, இராமனை அடைந்தான் வீடணன்.

“என்ன ஆயிற்று” என்று கேட்ட வினாவுக்கு வீடணன் “'உய்திறன் உடையார்க்கு அன்றோ அறவழி ஒழுகும் உள்ளம்? அவன் குட்டையில் ஊறிய மட்டை” என்று அவனைப் பற்றி விமரிசித்து முடித்தான் வீடணன்.

படுகளத்தில் ஒப்பாரி ஏது? சேனைகள் மோதின; அங்கதன், அனுமன், இலக்குவன் எனப் பலரும் கும்ப கருணனோடு சொற்போரும், மற்போரும், விற்போரும் செய்தனர். சுக்கிரீவனுக்கும் கும்ப கருணனுக்கும்