பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/307

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

யுத்த காண்டம்

307



“வறண்ட பாலை வனத்தில் நெற்பயிர்களைத் திரள விளைவிப்பதில் பயனில்லை” என்று கூறினான். பேரழகிற்கு இருக்கும் ஆற்றலைப் பிறழ உணர்ந்து அவர்கள் வேல்விழிக்கு வேந்தர் இரையாகிறார்கள்’ என்று ஒரு சரித்திரம் எழுதத் தொடங்கினான். அந்தச் சரித்திர பாடத்தை நரித்தனம் படைத்த தன் தந்தைக்குச் சொல்லி வைத்தான்; “'உயிர்மேல் உமக்கு ஆசை இருந்தால், இனியாவது உத்தமனாய்ச் செயல்படுக; நெருப்பாகிய அவள்மீது வைத்திருக்கும் விருப்பை விட்டுவிட்டு அவளை அவள் கணவன்பால் அகற்றுக; இதுதான் அறிவுடைய செயல் என்று அந்தச் சரித்திரத்தின் கடைசி வாசகத்தைப் படித்து முடித்தான்.

“அறம் நோக்கி அவளை விட்டுவிடுக என்றான்; நான் மீண்டும் போர்களம் செல்லவில்லையேல், மறம் நோக்கி உலகம் என்னைப் பழிக்கும்.” என்று கூறி, அவன்தன் முடிவை வீரத்தில் எழுதி வைத்து, வேறுவழி இல்லாமல் போர்க்களம் புகுந்தான்.

இந்திரசித்து, மற்றொரு கும்பகருணன் ஆகிப் போர்க்களத்தில் இலக்குவன் அம்புக்கு இரையானான்; அவன் தலையை அறுத்துத் தன்தமையன் இராமன் திருவடிகளில் காணிக்கையாய் வைத்தான் இலக்குவன். இந்திரசித்தன் தறுகண்மை படச் செயல்பட்ட ‘மாவீரன்’ என்ற புகழை நிலைநாட்டினான்; மறவர் வரிசையில் இந்திரசித்து ஒருவனாய் வைக்கப்பட்டான்.

வாய்விட்டு அழுவதற்கு மண்டோதரிக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தது; சேர்த்து வைத்த துயரமெல்லாம்