பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/308

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

308

கம்பராமாயணம்



ஒப்பாரி வடிவம் பெற்றன. “ஒப்பு யாரும் இல்லாத அந்தச் சீதையால்தான் இந்தக் கதி வந்தது” என்று அந்த ஒப்பாரி சொல்லாமல் சொல்லியது; அவள் சொற்கள் ஈட்டிபோல் இராவணன் நெஞ்சில் பாய்ந்தன; அங்கே மறைந்திருந்த வஞ்சிக்கொடி நினைவில் அவை தைத்தன.

எஞ்சி அவளைக் கொல்ல வாளோடு புறப்பட்ட இராவணனை மகோதரன் தடுத்தான்; “கொட்டிய பாலை எடுக்க முடியாது; வெட்டிய சீதையைத் திரும்பப் பெறமுடியாது, ஒருவேளை போரில் நீ வெற்றி கண்டால் வெறுமை யைத்தான் காண்பாய்; கண்கெட்டபின் கதிரவனை வணங்க முடியாது; சித்திரத்தைச் சிதைத்து விட்டால் வெற்றுச் சுவர்தான் எஞ்சி நிற்கும்” என்று கூறிச் சாம்பல் படிந்த நெருப்பை ஊதிக் கனலச் செய்தான்; ஆசை அவனைத் தடுத்து நிறுத்தியது.

சீதையை அடையவில்லை; அதனால் வந்தது வெறுப்பு: மகனை இழந்தான்; அதனால் நேர்ந்தது பரிதவிப்பு; பகைவன் என்பதால் இராமன்பால் எழுந்தது காழ்ப்பு; அனைத்தும் ஒன்று சேர்ந்து இராவணனை மறுபடியும் போர்க்களத்தில் கொண்டுவந்து நிறுத்தின.

மூலப்படை முழுவதும் நிலைகெட்டு நிருமூலமாகி விட்டன; வானரரைக் களப்பலி இடுதற்கு மண்டோதரி மற்றொரு மகனைப் பெற்றுத்தரவில்லை; கடமை வீரன் கும்பகருணன் மறுபடியும் பிறக்கப் போவதில்லை; இனி யாரை நம்பி இராவணன் வாழ முடியும்?

வீணை வித்தகன்; மத யானைகளை எதிர்த்த½வன்; வேதம் கற்றவன்; சிவனை வணங்கிச் சீர்மைகள்