பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாலகாண்டம்

45



அதற்குப் பாகீரதி’ என்ற பெயர் உண்டாயிற்று என்று விளக்கம் தந்தார்.

“மலையரசனாகிய பருவதராசனுக்கு இரண்டு புதல்வியர் இருந்தனர்; இவர்களின் தாய் பெயர் “மனோரமை”. மூத்தவள் ‘கங்கை’; இளையவள் ‘பார்வதி’; சிவனார் பார்வதியை இடப்பக்கத்தில் வைத்துச் சரிபாதி இடம் கொடுத்தார். பெண்ணுக்குச் சரி உரிமை தந்த முதற்கடவுள் சிவனார்; சக்தியும் சிவனுமாய் அவர்களை மாந்தர் வழிபடுகின்றனர்.

கங்கை வானவர்க்கு அமுதமாக விளங்கிப் பரலோகவாசியாய் இருந்தாள். அவள் தேவர்களுக்கு நீராடும் புனலாக நிலவினாள்.

‘சகரன்’ என்ற பெயருடன் சூரிய குலத்து அரசன் ஒருவன், தன் புகழை எட்டுத்திக்கும் பரப்பி, ஏற்றமுடன் ஆட்சி செய்து வந்தான். தன்னிகரில்லாத வேந்தனாய் அவன் விளங்கினான்; தன் மாட்சியை உலகுக்கு அறிவிக்க அக்கால வழக்கப்படி அசுவமேத யாகம் ஒன்று நடத்தினான். அவன் அனுப்பி வைத்த குதிரை எட்டுத்திக்கும் சென்றும் அடக்குவார் இன்றிப் பாதாள உலகம் சென்றது. அங்குத் தவத்திற் சிறந்த முனிவர் ‘கபிலர்’ என்பார். அதைக் கட்டி வைத்தார். அது மேலே எழும்பி வாராமல் அங்கே அகப்பட்டுக் கொண்டது.

சனகனின் புதல்வர் பதினாறாயிரவர் மண்ணைத் தோண்டி அந்த இடத்தைக் கண்டுபிடித்தனர். சகரர் தோண்டிய இடம் கடலாக ஆனமையின் அதற்குச் சாகரம் என்ற பெயரும் வழங்குகிறது. வேல் ஏந்திய மன்னரை