பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

கம்பராமாயணம்



தந்தையைக் கொன்றவனைப் பழிவாங்க, அந்த அரசனை மட்டும் அன்றி அவன் வாரிசுகளையும் தீர்த்துக் கட்டினான் பரசுராமன். மன்னரே அவனுக்கு நேர் எதிரிகனாய் மாறினர். தனிப்பட்ட பகை, சாதிப் பகையாய் உருக் கொண்டது. இருபத்தொரு தலைமுறைகளாய் அவன் மன்னன் இளைஞர்களைக்களை அறுத்து வந்தான்; அவர்கள் சிந்தும் குருதியைக் குளமாக்கி, அதில் நீராடித் தந்தைக்கு ஈமக்கடன் செய்து, அவருக்கு ஏம நெறி வகுத்துத் தந்தான்; ஒருவாறு சினம் அடங்கித் தவத்தில் கருத்தைச் செலுத்தினான்; வல்லவனுக்கு வல்லவன் தோன்றாமல் இருப்பது இல்லை.

தேவர் திருமாலுக்கும் சிவனுக்கும் பகையை மூட்டி விட்டு, யார் பெரியவர்? என்று குரல் எழுப்பினர். ஆரம்பத்தில் புகழ்மொழிக்குச் செவி சாய்த்துத் தம் நிலை மறந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். “இவர்கள் வில்களில் எது ஆற்றல் உடையது?” என்று வினா எழுப்பினர். தங்களைத் துண்டிவிட்டு வேடிக்கை பார்க்கின்றனர்” என்பதை அறிந்து கொண்டு அவர்கள் தம் கேளிக்கையை நிறுத்திக் கொண்டனர். போரைத் தவிர்த்து அமைதி காட்டினர்.

சிவதனுசு கைமாறி இறுதியில் சனகன் வசம் வந்து சேர்ந்தது; மாலின் வில் சமதக்கினி முனிவரிடம் ஒப்புவிக்கப்பட்டது; பின்பு அவர் மகன் பரசுராமன் அதற்கு வாரிசு ஆயினான். மாலின் வில் தன்னிடம் இருப்பதால் அவன் தருக்கித் திரிந்தான்.

பரசுராமன் பல மன்னர்களைப் புறமுதுகிடச் செய்தவன்; மூத்தவன்; தவத்தில் தலை சிறந்தவன்;