பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

கம்பராமாயணம்



கொள்ளவில்லை. மதவெறி அவனை மடுத்தது; சிவதனுசா? மாலின் வில்லா? எது உய்ர்ந்தது? என்பது தலைக் கொண்டது; அற்பச் சிறுவன் சொற்பவில்லை சொகுசாக வளைத்துவிட்டான். மாலின் வில்லைக் கண்டு அவன் மலைவது உறுதி” என்று நம்பினான்.

தசரதனுக்குப் பரசுராமனை எதிர்க்கத் துணிவு இல்லை. எங்கே தன் மகனைப் பகையாக்கித் தம் வாழ்வை நகையாக்கி விடுவானோ? என்று திகைத் தான்; செயல் மறந்து நினைவு இழந்து மயக்கமுற்றுத் தரையில் விழுந்து விட்டான். இராமனைச் சந்தித்துப் பரசுராமன் தன் கை வில்லைக் காட்டி, இதை வளைப்பது இருக்கட்டும்; முறிப்பது கிடக்கட்டும், எடுத்துத் துக்க முடியுமா?” என்று கூறி அவன் வீரத்தைத் துண்டி ஊக்குவித்தான்.

“துக்கவும் முடியும்; அதைக் கொண்டு தாக்கவும் முடியும்” என்றான் இராமன்.

“முதலில் இதனைத் தூக்கி வளை” என்று அந்த இளைஞனை அழைத்தான் பரசுராமன்.

இராமன் அந்த வில்லைத் தன்கையில் வாங்கி, வளைத்துக் காட்டி, அதன் நாணையும் ஏற்றி, அம்பும் குறி வைத்தான்.

“இதற்கு இலக்கு யாது?” என்று கேட்டான்.

“வல்லவன் என்று செருக்கித் திரிந்த புல்லன் யான்; என்னை இலக்கு ஆக்குக” என்றான் பரசுராமன்.