பக்கம்:கம்பர், வ. சுப. மாணிக்கம்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காப்பியப் பார்வை

29


இங்கு அழைத்து வந்தவன்! தயரதன் வேண்டுகோள் குடும்பம் பற்றியதன்று, முடிசூடல் பற்றியது. ஆதலால் தயரதன் வேண்டுகோளைத் தந்தை வேண்டுகோளாகக் கருதாமல் அரசன் ஆணையாக மதிக்கின்றான். வீட்டில் கேட்டிருந்தால் ஒருகால் வாதாட இடமுண்டு. அரசவையில், அமைச்சர் முன்னிலையில், அரசன் வாய்மொழியை ஆணையாக மதித்தொழுக வேண்டும். அதுதான் ஊருக்கு வழிகாட்டி. தந்தையின் பாரத்தை மகன்தாங்குதல் கடன் என்று உணர்ந்தான்; இது வேண்டுகோளுக்கே உரியதில்லை என்று கருதினான். அதற்குமேல் இராமன் என்ன நினைத்தான்? கொற்றவனாகிய அரசன் எவனை எது ஏவினான், அந்த ஏவுதலை அவன் செய்வதன்றோ நீதி, அரசமுறைமை என்று எண்ணினான். அவ்வெண்ணம் பிறந்ததும் கட்டளையைப் பணிந்து ஏற்றுக் கொண்டான்.

பொதுவாகவே கம்பர் தம் பர்த்திரங்களை மிகப் பேசவிடும் போக்குடையவர். ஒரு பாத்திரம் எவ்வளவு கருத்துக்களைச் சொல்லலாமோ அவ்வளவையும் சொல்லிவிடச் செய்பவர். பேசாப் பாத்திரங்களும் அவர்தம் காப்பியத்துச் சிலவே, பேச்சுக் குறைந்த இடங்களும் சிலவே, பேசச் செய்யாத இடமும் சிலவினும் சிலவே. அச்சிலவிடங்களில் இது ஒன்று. அயோத்தியா காண்டம் மந்திரப் படலத்தைப் பாருங்கள். தயரதன் மந்திரிகளை அழைத்துத் துறவு நாடும் தன் கருத்தைப் பலபடமொழிகின்றான். கேட்ட மந்திரிகள் மன்னன் ஆடசியையும், மகன் சிறப்பையும் பற்றிப் பாராட்டுகின்றனர். மந்திரி அழைக்கவந்த இராமன் முன்னும் தயரதன் முடிசூடுவது குறித்துப் பலவாறு பேசுகின்றான். இவ்வாறு அறுபத் தொன்பது செய்யுட்கள் நடக்கின்றன. ஆனால் இராமன் மறுமொழியாக ஒரு பாடலேனும் இல்லை. ஒரு சொல்லேனும் உண்டா? தாதை அப்பரிசு உரை செய, மகன் ஏதாவது உரை செய்தானா? தந்தை வேண்டுகோளைக் கேட்டபோது, கடனிதென உணர்ந்தான்; நீதி எனக்கென நினைத்தான்; அங்ஙனம் கடமையை உணர்ந்து நீதியை நினைந்தவளவில் அக்கட்டளையை ஏற்றுக் கொண்டதற்கு அறிகுறியாகத் தலை வணங்கி நின்றான். மெய்ப்பாட்டளவில் இப்பாடலை முடித்துக் கொண்டார் கம்பர்.

கொற்றவன் ஏவியது ஏதுவாயினும் அதனை அப்படியே ஆம் என்று கூடச் சொல்லும் அளவிற்குக் கால இடைவெளி கொடாது பணியவேண்டும் என்று அரசு நீதிகாட்டுகின்றார் கம்பர். இதன்பின் தயரதன் தன் அரண்மனை சென்றுவிடுகின்றான். இராமனும் தன் அரண்மனைக்குப் போய்விடுகின்றான். காப்பியத்து ஒரு பெரிய நிகழ்ச்சியை - நிகழ்ச்சிக்கெல்லாம் கருவான நிகழ்ச்சியை - ஒரு