பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும் دجلإصلاح பொன்மயமான சீதையைப் பற்றிய சிந்தனை இராவணனுடைய சிந்தையில் புகுந்துவிட்டது. ஏற்கனவே அவனிடம் அரக்க குணம் உள்ளது. அத்துடன் அவன் காம நோயால் தன்னை மறந்த நிலையி லானான். மன்மதன் கணைகளினால் அவன் நிலை கலங்கி உன் மத்தன் ஆனான். அவனுடைய பேராற்றல்கள் அனைத்தும் அவனுடைய காம உணர்வில் போய் அடங்கிவிட்டன. இதையே 64 'பொன்மயமான நங்கை மனம் புகப்புன்மை பூண்ட தன்மையோ, அரக்கன் தன்னை அயர்த்ததோர் தன்மையாலோ! மன்மதன் வாளிது.ாவி நலிவதோர் வலத்தன் ஆனான்; வன்மையை மாற்றும் ஆற்றல் காமத்தே வதிந்ததன்றே! இராவணன் சீதையின் நினைவால் நிலைகுலைந்து நின்றான். நிற்கவும் முடியவில்லை. இருக்கவும் முடியவில்லை. தன் மாளிகைக்குச் சென்றான். சோலைக்குச் சென்றான். மோக நோயால் எரிந்து கொண்டிருந்த அவனுடைய உடம்பின் உஷ்ணம் தணியவில்லை. குளிர்ந்த நீர் நிறைந்த தடாகத்தில் விழுந்தான். இருப்பினும் அவனுடைய உடலில் எழும் வெப்பம் தணியவில்லை. பெருங்காதல் என்னும் விஷத்தை உண்டவர்களுக்கு எந்த மருந்தும் இல்லை. இன்பமும், துன்பமும் உள்ளத்தோடு இணைந்ததாகும். 'வன்பனை மரமும், தீயும், மலைகளும் குளிர, வாழும் மென்பனி எரிந்த தென்றால், வேனிலை விளம்பலாமோ? அன்பெனும் விடம் உண்டாரை ஆற்றலாம் மருந்தும் உண்டோ? இன்பமும் துன்பமும் தானும் உள்ளத்தோடு இயைந்த அன்றே’’ என்று கம்பநாடர் குறிப்பிடுகிறார். கம்பன் இங்கு ஒரு அபூர்வமான காட்சியைக் காட்டுகிறார். இராவணனுடைய உடல் எல்லாம் காமத்தீயால் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது. அதைத் தணிப்பதற்கு பல முயற்சிகளைச் செய்கிறான். அவன் வல்லமை மிக்கவன். பருவ காலங்களையும் இதர பல இயற்கை சக்திகளையும் வென்றவன். அவன் பருவகாலங்களை அழைத்து தனது உடலின் காம வெப்பத்தைத் தணிக்கும்படி கூறுகிறான். கார் காலத்தை விரும்பினான். அது வந்தது. ஆயினும் அவனுடைய வெம்மை தணியவில்லை. குளிர்பருவத்தை அழைத்தான். அது வந்தது, ஆயினும் பயனில்லை. எந்தப் பருவ காலமும் வேண்டாம் என்று வெறுத்தான்.