பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் 78 >}=== காதலும் பெருங்காதலும் இலக்குவன் அவளைக் கண்ட போது 'பாவியர், பண்பிலர், என்னிடம் காம வெறி கொண்டு நெருங்கி வருகிறாள்' என்று உள்ளத்தில் எண்ணம் கொண்டு விலங்குகள் நிறைந்து திரியும் இவ்வனத்தில் இருளில் இங்கு வந்துள்ளாய் நீ யாரடி, 'மாவியல் கானின் வயங்கிருள் வந்தாய் யாவள் அடி உரைசெய்’ என்று கேட்டான். அவன் பேசியதற்கு எதிர் பேசுவதற்கு நாணமில்லாதவளாய் காம உணர்வால் கடுமையாக ஊசலாடிக் கொண்டிருந்த உள்ளத்தவளாய் "நேசமில் அன்பிலனாகிய நின்பால் ஆசையின் வந்த அயோமுகி’ என்றாள் என்று கம்பன் மிக நுட்பமாகக் குறிப்பிடுகிறார். என்னை மணந்து கொள் என்று இலக்குவனை வேண்டுகிறாள், அயோமுகி. இலக்குவன் மறுக்கிறான். அப்போது அந்த அரக்கி இலக்குவனை பலாத்காரமாகக் கட்டிப்பிடித்துத் தழுவித் துக்கிக் கொண்டு வானில் சென்றாள். இலக்குவன் கடுங்கோபம் கொண்டு அவளுடைய காதுகளையும், மூக்கினையும், முலைக் காம்புகளையும் அறுத்தான். அவள் அலறிக் கொண்டு கீழே விழுந்தாள். அவளுடைய பிடியிலிருந்து இலக்குவன் விடுபட்டு வேகமாக இராமனிடம் வந்து சேர்ந்தான். அயோமுகியின் கதை இராமாயணப் பெருங்கதையில் இடையில் ஒரு சிறுகதை. இவ்வாறு பல சிறு நிகழ்ச்சிகளும் சிறு கதைகளும் காரணத்தோடு இடையில் வருகின்றன. அயோமுகியின் கதையில் அவ்வரக்கியின் காம வெறி இயல்பு சுட்டிக் காட்டப்படுகிறது. இக்கதையில் முக்கிய பாத்திரம் இலக்குவன். புலனடக்கம் கொண்டவன். இராமன் மீதுள்ள பக்தியினால் அவனைத் தொடர்ந்து வருகிறான். இலக்குவனுடைய புலனடக்கத்திற்கு ஆதாரமாக ஒரு சோதனையாக இந் நிகழ்ச்சி வருவதைக் காணலாம். இலக்குவன் திரும்பி வருவதில் கால தாமதம் ஏற்படுகிறது. இலக்குவனைக் காணாமல் சீதையைப் பிரிந்த இராமன் தன் தம்பியையும் காணாமல் அவனையும் அரக்கர்கள் தூக்கிக் கொண்டு போய் விட்டார்களோ என்று மனம் தளர்ந்துத் தற்கொலை செய்து