பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் 79 கொள்ள முயலுகிறான். அந்த நேரத்தில் அரக்கியின் சத்தம் கேட்கிறது. இலக்குவன் இராமனிடம் வந்து சேர்ந்து நடந்ததைக் கூறுகிறான். 12. கிட்கிந்தையில் இராமனும் இலக்குவனும், சுக்கிரீவனையும் அனுமனையும் சந்தித்தனர். நட்பு கொண்டனர். பரஸ்பரம் உதவி செய்து கொள்வதாக அரசியல் உடன்படிக்கை செய்து கொண்டனர். அந்த உடன் படிக்கையின் படி இராமன் வாலியைக் கொன்று சுக்கிரீவனுக்கு ஆட்சியையும் வாலி வவ்வி வைத்திருக்கும் சுக்கிரீ வனுடைய தாரத்தையும் மீட்டுக் கொடுப்பதாக வாக்குறுதி கொடுக்கிறான். “தலைமையோடு நின் தாரமும் உனக்கின்று தருவேன்’ என்று இராமன் சுக்கிரீவனிடம் கூறுகிறான். இவ்வாறு இராமனும் சுக்கிரீவனும் உடன்பாடு செய்து கொண்டு அமர்ந்திருந்த போது சீதையின் அணிகலன்களை இராமனுக்குக் காட்டினர். இராவணன் சீதையை வானவெளியில் கொண்டுச் சென்ற பொழுது சீதைத் தனது அணிகலன்களை கீழே விட்டெறிந்து விட்டுச் சென்றாள். அவ்வணிகலன்களை அடையாளம் கொண்டு தன்னைத் தேடிக் கண்டு பிடிக்க இவை உதவலாம் என்று கருதி அவ்வாறு செய்திருக்கிறாள். அவ்வணிகலன்களைக் கண்ட இராமன் அவை சீதை யினுடையவைத் தான் என்று அடையாளம் கண்டுச் சீதையை நினைந்து வருத்தமடைந்து சோர்வடைந்தும் பேசுகிறான். வில்லைக் கையிலேந்திய வீரனாகிய நான் உயிருடன் இருக்கும் போதே எனது மனைவி தனது அணிகலன்களைக் கழற்றி எறிய