பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் 81 தாரையின் பெண்மை பற்றி இராமனுடைய ஏற்பாட்டின் படி சுக்கிரீவன் தனது அண்ணன் வாலியைப் போருக்கு அழைக்கிறான். வாலி போருக்கு எழுகிறான். அப்போது வாலியின் துணைவி தாரை தடுக்கிறாள். தாரையைப் பற்றிக் கம்பன் கூறும் போது. 'ஆயிடைத் தாரை என்ற அமிழ்தில் தோன்றிய வேயிடைத் தோளினாள் இடைவிலக்கினாள்’ எனச் சிறப்பாக குறிப்பிடுகிறார். என்னுடன் போர் செய்ய வருபவனின் பலத்தில் பாதி எனக்கு வந்துவிடும் என்னும் வரம் எனக்குள்ளதை மறந்து விட்டாயா? என்னையாரும் வெற்றி கொள்ள முடியாது. நீ கவலைப்பட வேண்டாம் என்று தன்னைத் தடுத்த தன் மனைவி தாரையிடம் மாவீரன் வாலி கூறுகிறான். மீண்டும் தாரை கூறுகிறாள் உமது தம்பிக்கு ஏதோ ஒரு துணை கிடைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவருக்கு உம்மை எதிர்க்கும் துணிச்சல் ஏற்பட்டிருக்காது. உம் உயிரைக் கொல்வதற்கு இராமன் என்று ஒருவன் வந்திருப்பதாக எனக்கு வேண்டியவர்கள் கூறினார்கள். 'அன்னது கேட்டவள், அரச! ஆயவற்கு இன்னுயிர் நட்பமைந்து இராமன் என்பவன் உன் உயிர் கோடலுக்கு உடன் வந்தான், எனத் துன்னிய அன்பினர் சொல்லினார்; என்றாள்” என்று கூறுகிறாள். தாரை மிகவும் நுட்பமான அறிவு கொண்டவள். பாரதப் பெண்மணிகளுக்கு இயல்பாக உள்ள பொதுஅறிவு மிக்கவள். வாலி விரத்தில் மிக்கவன். மாவீரன். மிக்க பலம் கொண்டவன். தன் பலத்தின் மீது அளவு கடந்த நம்பிக்கை கொண்டவன். தன்னை யாராலும் வெல்ல முடியாது என்னும் தனியாண்மைக் கருத்துக் கொண்டவன். அத்துடன் இராமனைப் பற்றி பல விவரங்களையும் தெரிந்து கொண்டிருந்தவன். எனவே சுக்கிரீவனுக்குத் துணையாக இராமன் வந்துத் தன்னைக்கொல்ல வந்துள்ளான் என்று தாரை சொன்ன செய்தியை அவன் நம்பவில்லை. தாரை அறியாமையால் இராமனைப் பற்றி இவ்வாறு கூறுகிறாள் என்று கருதி, இராமன் அறத்தின் நெறிகளைல்லாம் அறிந்தவன். தனக்குக் கிடைத்த ஆட்சிச் செல்வத்தைத் தனது தம்பிக்குக் கொடுத்து விட்டுக் காட்டிற்கு வந்தவன். தம்பியர் அல்லது தனக்கு வேறு உயிர் இல்லாதவன்.