பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் 88 ਔਂ–= * காதலும் பெருங்காதலும் அவ்வாறு நாட்டையும் மக்களையும் பேணிக் காக்கும் போது அறத்தின் எல்லைக்குள் நின்று ஆட்சி நடத்த வேண்டும். மக்களுக்குத் தீமை ஏற்பட்டால் அத் தீமைகள் செய்வோரைச் சுட்டெரிக்க வேண்டும். தீயோரிடமிருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்று இராமபிரான் அறிவுரைகளையும் அரசியல் நெறி முறைகளையும் எடுத்துக் கூறி மாளி காலம் முடிந்தவுடன் பெருங்கடல் போன்ற உங்கள் சேனையுடன் வருக என்று சுக்கிரீவனை வழியனுப்பி வைத்தான். இசையினும் இனிய சொல்லாள் கார்காலம் போயிற்று. குறித்தபடி சுக்கிரீவன் தனது படைகளுடன் இராமனிடம் வரவில்லை. செய்நன்றி மறந்தானோ அரச போகத்தில் மூழ்கி மயக்கம் கொண்டானோ, அறம் மறந்தானோ, மெய்ம்மை சிதைத்து உரை பொய்த்தானோ? என்றெல்லாம் மனம் கலங்கி இராமன் இலக்குவனை அனுப்பி நிலைமையை அறிந்துவரச் சொன்னான். இலக்குவன் கிட்கிந்தையை நோக்கிக் கோபத்துடன் வேகமாகச் சென்றான். இலக்குவனைக் கண்ட வானரர் சிலர் ஒடிப் போய் அங்கதனை சந்தித்து இலக்குவன் கோபத்தோடு வரும் நிலைமையைக் கூறினர். அங்கதன் வேகமாகச் சுக்கிரீவன் இருக்கும் இடத்திற்குச் சென்றான். சுக்கிரீவன் தனது அரண்மனைக்குள் மது மயக்கத்தில் மங்கையருடன் மகிழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தான். அங்கதன் சென்று தன் தாதையைத் தட்டி எழுப்பிப் பார்த்தான். ஆனால் சுக்கிரீவனோ தன் நினைவின்றி மயக்கத்தில் ஆழ்ந்திருந்தான். அங்கதன் அனுமனை அணுகினான். இருவரும் தாரையிடம் சென்றனர். தாரை மிகவும் நிதானமாகப் போய் இலக்குவனை சந்தித்தாள். இக்காட்சியைக் கவிச் சக்கரவர்த்தி மிகவும் அற்புதமாக எடுத்துக் காட்டுகிறார். தாரை இலக்குவனை சந்தித்து மிகவும் அடக்கத்துடன் 'அந்தமில் காலம் நோற்ற ஆற்றல் உண்டாயின் அன்றி, இந்திரன் முதலினோரால் எய்தலாம் இயல்பிற்று அன்றே: மைந்த நின் பாதம் கொண்டு எம் மனை வரப் பெற்று வாழ்ந்தேம் 1. உய்ந்தனம், வினையும் தீர்ந்தேம், உறுதி வேறு இதனின் உண்டே?” என்று மிகவும் நயமாக அவனை வரவேற்றுப் பேசினாள். மேலும்