பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் 90 >}=== காதலும் பெருங்காதலும் கட்டாயமாக இருந்திருக்கவில்லை. பின்னர் வந்த சில போலிச் சுவடிகள் அதைக் கட்டாயப்படுத்தி நிலை நிறுத்தியிருக்கிறது. இராவணனுடைய பட்ட மகிஷி மண்டோதரி தனது கணவன் மாண்டு கிடந்த போது அவனைத் தழுவித் தானும் உயிர் துறந்தாள். தசரதன் இறந்த போது அவனுடைய மனைவியர் சிலர் உடன் கட்டை ஏறினர். ஆனால் கோசலை, சுமித்திரை, கைகேயி ஆகியோர் கைமை நோம்பேற்றனர். காரணம் கணவர் இறந்த பின்னரும் பிள்ளைகளுக்கு உதவியாக இருந்து அவர்களுடைய பல கடமைகளுக்குத் துணையாக இருக்க வேண்டியதிருந்தது. மகாபாரத இதிகாசத்தில் பாண்டு இறந்த போது மாத்ரி தேவி உடன் கட்டை ஏறினாள். குந்திதேவி கைமை காத்து தன் பிள்ளைகளுக்குத் துணையாக இருந்துத் தனது கடமைகளை நிறைவேற்றினாள் என்பதைக் காண்கிறோம். கம்பனுடைய இராமாயணப் பெருங்காதையில் தாரை, கைம்மை நோன்பு காத்து கிட்கிந்தை ஆட்சிக்கும் தன் மகன் அங்கதனுக்கும் துணையாக இருந்துத் தனது அரச குடும்பக் கடமைகளை நிறைவேற்றினாள். அதனால் தான் இலக்குவன் வந்துள்ள செய்தியை அறிந்த அங்கதன் முதலில் சுக்கிரீவனிடம் சென்று அவன் மயக்கத்தைப் பார்த்து விட்டு அடுத்து அனுமனை அழைத்துக் கொண்டு தாரையிடம் சென்று அவளிடம் விவரத்தைக் கூறுகிறான். அப்போது தாரை தலையிடுகிறாள். அவள் மதி நுட்பமும் பொது அறிவும் மிக்கவள். இலக்குவனைச் சந்தித்துப் பேசுகிறாள். அத்தாரையின் தோற்றத்தைக் கம்பன் மிக அற்புதமாகச் சித்தரித்துக் காட்டுகிறார். “மங்கல அணியை நீக்கி, மணி அணி துறந்து, வாசக் கொங்கலர் கோதை மாற்றிக் குங்குமம் சாந்தம் கொட்டாப் பொங்கு மென் முலைகள், பூகக் கழுத்தொடு மறையப் போர்த்த நங்கையைக் கண்ட வள்ளல் நயனங்கள் பனிப்ப நின்றான்' என்று கம்பர் குறிப்பிடுகிறார். தாரையின் தோற்றத்தைக் கண்டுக் கண்ணிர் பொங்க இலக்குவன் தனது தாயரை நினைத்து இணையராம் என்னையின்ற இருவரும் என்னவந்த நினைவினான், அயர்ப்புச் சென்ற நெஞ்சினன், நெடிது நின்றான் என்றுக் கம்பநாடர் மிக உருக்கமாகக் குறிப்பிடுகிறார்.