பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

і fenfl = _சீனிவாசன் 95 இன்னும் அதன் கணக்கிலடங்காத பெருக்கத்தைப் பற்றி 'ஈசன் மேனியை, ஈரைந்து திசைகளை, ஈண்டில் ஆசில் சேனையை, ஐம் பெரும் பூதத்தை, அறிவைப் பேசும் பேச்சினைச் சமயங்கள் பிணக்குறும் பிணக்கை, வாசமாலையாய்! யாவரே முடிவெண்ண வல்லார்?” என்று குறிப்பிடுகிறார். வானர சேனையின் பெருக்கத்திற்கு ஈசன் மேனி, பத்து திசைகள், ஐம் பெரும் பூதங்கள், அறிவு, பேச்சுக்கள், சமயங்கள், பிணக்குறும் பிணக்குகள், ஆகியவைகள் உவமைகளாகக் கூறப் பட்டிருக்கின்றன. இவையெல்லாம் எண்ணிலடங்காதவை அனந்தமானவை. இப்பெரும் படையைக் கண்டு இலக்குவனே ஆச்சரியப்பட்டு பெரும் வியப்படைந்து மகிழ்ச்சியடைந்து 'பாவம் தோற்றது, தருமமே வென்றது இப்படையால்’’ என்று கூறுகிறான். அனுமன் தலைமையில் படைகள் வந்து சேர்ந்தவுடன் சீதையைத் தேடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. அதற்காக நாலா பக்கங்களிலும் செல்ல படைத் தலைவர்கள் நியமிக்கப் படுகிறார்கள். மாருதி, அங்கதன், சாம்புவன் ஆகியோர் இரண்டு வெள்ளம் சேனைகளுடன் தென்திசை நோக்கிச் செல்ல சுக்கிரீவன் ஆணையிடுகிறான். அது போல் இதர திசைகளுக்கம் படைத் தலைவர்கள் நியமிக்கப் படுகிறார்கள். தென் திசை நோக்கிச் செல்லும் அனுமன் படை சீதையைத் தேடு வதில் வெற்றி காணும் என்னும் நம்பிக்கை இராமனுக்கு ஏற்படுகிறது. சுக்கிரீவனும் அனுமனை அழைத்துத் தெற்கு நோக்கிச் செல்ல வேண்டிய வழியைப் பற்றி விரிவாக எடுத்துக் கூறினான். வழியில் உள்ள அருந்ததி மலை, திருவேங்கட மலை, தொண்டை நாடு, சோழ நாடு தமிழ் நாடு, பொதிகை மலை, மகேந்திர மலை முதலியவை பற்றியெல்லாம் மிகவும் சிறப்பாக எடுத்துக் கூறுகிறான். தென் திசையில் உள்ள 'அரன் அதிகம், உலகளந்த அரி அதிகன் என்றுரைக்கும் அறிவிலோர்க்குப் பரகதி சென்று அடைவரிய பரிசே போல் புகல் அரிய பண்பிற்று ஆமால்