பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் 108 2)=> காதலும் பெருங்காதலும் சுரசை என்பவள் அனுமனைத் தடுத்தாள். அவள் நெருப்பு போன்ற பசிப்பிணி மிக்கவள். என்பசிப் பிணி தீர்க்க என் வாயில் புகுவாய்” என்று வாயைப் பிளந்து கொண்டு எதிரில் வந்தாள். அனுமன் அவளைப் பார்த்துப் பெண் பாலாகிய நீ பசிப்பிணி கொண்டிருக்கிறாய் எனது உடம்பை உண்டு உனது பசிப் பிணியைத் தீர்த்துக் கொள்ள உதவுகிறேன். ஆனால் அதற்கு முன்பாக எனது நாயகனுடைய ஏவல் பணியை முடித்து விட்டு வந்து விடுகிறேன்” என்று அவளிடம் அனுமன் கேட்டுக் கொண்டான். அவளோ விடவில்லை. “உன்னைத் தின்றே தீர்வேன்' என்றாள் "உன்னால் முடிந்தால் தின்று பார் என்று அனுமன் கூறித் தனது உடலை மிகச் சிறிய அளவில் சுருக்கிக் கொண்டு அவளுடைய வாயில் புகுந்து வெளியேறி விட்டான். தான் தோல்வியுற்றதை ஏற்று அச்சுரபை அனுமனை வாழ்த்திவிட்டுச் சென்று விட்டாள். அனுமனும் அப்பால் சென்றுத் தனது பயணத்தைத் தொடர்ந்தான். அப்பொழுது மற்றொருத்தி குறுக்கிட்டாள். அவள் அறத்தைத் தின்றவள். அவள் எதிரில் வந்து அனுமனைத் தடுத்தாள். “பெண் பால் என்று என்னைக் கருதாதே என்னைத் தேவர்கள் நெருங்கினாலும் அவர்களைத் தின்று தீர்ப்பேன். என் எதிரில் காலன் வந்தாலும் நான் ஒருத்தியே நின்று அவனைத் தின்று தீர்ப்பேன். என்று கூறிக் கொண்டு அனுமனை விழுங்குவதற்காக வாயைத் திறந்தாள், அனுமனோ அவளுடைய வயிற்றுக்குள் புகுந்து வெளியேறி விட்டான் பின்னர் விரைந்து சென்று இலங்கையை அடைந்தான். இங்கு அனுமனுடைய அரும் பணிக்கு இடையூறாக இரு பெண் பேய்கள் வருகின்றன. அவைகளின் வாயில் நுழைந்து வெளியேறி மாருதி தனது கடமையை ஆற்றக் கடுகில் விரைந்தான் என்பதைக் காண்கிறோம். 15. இலங்கை நகரின் காட்சி இலங்கை நகரை அனுமன் தன் இரு கண்களால் கண்டான். அந்நகரின் அழகைக் கண்டு ஆச்சரியப்பட்டான். அந்நகர் தேவர்களுடைய அமராவதி நகரைக் காட்டிலும் அழகு மிக்கதாக