பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும் z = 112 'பொன் கொண்டு இழைத்த? மணியைக் கொடு பொதிந்த? மின் கொண்டு அமைத்த? வெயிலைக் கொடு சமைத்த? என் கொண்டு இயற்றிய எனத் தெரிவு இலாத வன் கொண்டல் விட்டு, மதிமுட்டு வன மாடம்” என்று குறிப்பிடுகிறார். நகரெங்கும் கற்பக விருட்சங்கள் நிறைந்து பச்சைப் பசேலென்று பசுமையாகக் காணப்படுகின்றன. செல்வச் செழிப்பில் திகழ்ந்த மக்களும் கனகம் நிறைந்த இல்லங்களும் நிரம்பியிருந்தன. அரக்கியர் களுக்கு தெய்வ மாதவர்கள் குற்றேவல் செய்து கொண்டிருந்தனர். இவையெல்லாம் ஒருவர் சொல்லும் தரத்தில் இல்லை. கம்பனே விவரித்துக் கூற முடியாத படி தவத்தின் தவமாகத் திகழ்ந்தது அப்பெருநகரம். அரக்கர்கள் ஆனந்த வாழ்வு வாழ்ந்தனர். அத்துடன் படைபலம் மிக்கவர்களாகவும் செழுமையாகவும் வாழ்ந்து வந்தனர். அத்தகைய செல்வச் செழிப்பும் வல்லமையும் ஆனந்த வாழ்வும் அந்த இலங்கையின் வேந்தனுடைய மனம் போன போக்கினால் விரைவில் அழியப் போகிறது அவன் 'பெண்மை நீங்காத கற்புடைப் பேதையை சிறைவைத்த காரணத்தால் மாருதி தனது உடலைச் சுருக்கிக் கொண்டு வீதிகளின் நடுவில் செல்லாமல் மாளிகைகளின் ஒரமாகவே சென்றான். "ஆத்துறு சாலை தோறும் ஆனையின் கூடந்தோறும் மாத்துறு மாடந் தோறும் வாசியின் பந்தி தோறும் காத்துறு சோலை தோறும், கருங்கடல் கடந்த தாளான் பூத்தொறும் வாவிச் செல்லும் பொறிவரி வண்டின், போனான்' மாருதி நகரின் பல காட்சிகளையும் கண்டு கொண்டே சென்றான். கும்பகருணன் துங்கிக் கொண்டிருந்ததை அவனுடைய மாளிகையில் கண்டான். அவ்வரக்கனைக் கண்ட போது அனுமனுக்குக் கோபம் வந்தது. அவன் இராவணனாக இருப்பானோ என்று கருதி அவனுக்கு அக்கோபம் வந்தது. ஆயினும் அவன் இராவணனாக இருக்க மாட்டான் பத்து தலைகளும் இருபது தோள்களும் இல்லை என்ற அவ்வனுமன், ஏறிய முனிவு எனும் வடவை வெம் கனலை அறிவெனும் பெரும் பரவை அம்புனலினால் அவித்தான்’ என்று கம்பநாடர் குறிப்பிடுகிறார். சினத்திற்கு வடவைவம் கனலும்