பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.சீனி H ..")| Б.ШПТЕF5UT 119 இனையது ஒர் தன்மை எறுழ் வலி அரக்கர் ஏந்தல் வந்து எய்துகின்றானை அனையது ஒர்தன்மை, அஞ்சனை சிறுவன் கண்டனன் அமைவுற நோக்கி, வினையமும் செயலும், மேல்விளை பொருளும் இவ்வழி விளங்கும் என்று எண்ணி, வனைகழல் இராமன் பெரும் பெயர் ஒதி, இருந்தனன் வந்து அயல் மறைந்தே" இவ்வாறு இராவணன் தன் இயல்பான கம்பீரத்துடனும், செயற்கையான பலவகை ஒப்பனைகளுடனும் பரிவாரங்களுடனும் சீதையிடம் வந்ததை அனுமன் கண்டான். என்ன நடக்குமோ என்று கருதி மறைவாக இருந்து கவனித்துக் கொண்டிருந்தான். இராவணன் வருகையை அனுமன் மிகப் பொருமையாகப் பார்த்துக் கொண்டிருந்தான். அஞ்சனை சிறுவன் கண்டனன் அமைவுற நோக்கி வினையமும், செயலும், மேல்விளை பொருளும் இவ்வழி விளங்கும்” என்று எண்ணி, வனைகழல் இராமன் பெரும் பெயர் ஒதி இருந்தனன் வந்து அயல் மறைந்தே' என்று கம்பன் மிகவும் நுட்பமாகக் குறிப்பிடுகிறார். புலியென வந்த அரக்கனைக் கண்டு மான் போன்ற சீதை கலங்கினாள் என்னும் பொருளில், 'ஆயிடை அரக்கன் அரம்மையர் குழுவும் அல்லவும், வேறு அயல் அகல மேயினன், பெண்ணின் விளக்கெனும் தகையாள் இருந்துழி, ஆண்டு அவள், வெருவி, போயின உயிரள் ஆம் என நடுங்கிப் பொறி வரி, எறுழ்வலிப், புகைக் கண், காய் சின உருவை தின்னிய வந்த கலை இளம் பிணை எனக் கரைந்தாள்' என்று கம்பன் கவலை பொதிந்த சொற்களில் குறிப்பிடுகிறார். இங்கு ஒரு அறிய காட்சி நம் முன் நிற்கிறது. காம வெறியுடன் ஆசை மேவிட அலங்காரங்களுடன் வந்து நிற்கிறான் இராவணன். அவன் இலங்கையின் பேரரசன். அவன் நினைத்த காரியத்தை எதையும் செய்து முடிக்கலாம். விருப்பமில்லாத ஒரு பெண்ணைத் தீண்ட முடியாது என்னும் சாபம் ஒன்று இருப்பதால் அவன் சீதையை