பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் 120 - تدخلإصلا காதலும் பெருங்காதலும் இணங்க வைக்க எல்லா சாகசங்களையும் முயற்சிகளையும் செய்து கொண்டு சீதையின் முன்பு நிற்கிறான் என்று கம்பன் குறிப்பிடுகிறார். மறுபககம, சிறைப்படுத்தப்பட்ட சீதை என்ன நடக்குமோ என அஞ்சியும் மறுபக்கம் தனது கற்பின் வலிமையால் உறுதியாகவும் இருக்கிறாள். மூன்றாவதாக, சீதையும் இராவணனும் அறியாமல் அனுமன் மறைந்து நின்று இருவரையும் பார்த்துக் கொண்டு இருக்கிறான். இராவணன் தரப்பில் எல்லை மீறல் எதுவும் நடக்குமானால், அவன் எதிர்பாராமல் அவன் மீது பாய்ந்து அவனை வீழ்த்தவும் தயாராகவும் அனுமன் மரக்கிளையில் மறைந்து அமர்ந்துள்ளான். இதை, "கூசி, ஆவி, குலைவுறு வாளையும் ஆசையால், உயிர் ஆக அழிவானையும் காசு இல் கண் இணை சான்று எனக் கண்டனன் ஊசல் ஆடி உளையும் உளத்தினான்’ என்று அனுமன் இருந்த நிலையைப் பற்றிக் கம்பநாடர் குறிப்பிடுகிறார். இந்த நிலையில் ஜானகியின் உறுதியைக் கண்ட அனுமன், 'வாழி சானகி! வாழி இராகவன்! வாழி நான் மறை! வாழியர் அந்தணர்! வாழி நல் அறம்! என்று உற வாழ்த்தினான்; ஊழிதோறும் உயர்வுறும் கீர்த்தியான்” இங்கு அனுமனைப் பற்றி அவனுடைய ஆற்றலையும் அருஞ் செயல்களையும் பற்றி கம்பன் மிகவும் உயர்வாகப் பாராட்டிப் பேசுகிறான். அந்த வகையில் “ஊழிதோறும் உயர்வுறும் கீர்த்தியான்” என்று பெருமையுடன் குறிப்பிடுகிறார். இராவணனுடைய கொஞ்சுதலையும் சீதையின் சீற்றம் மிக்க வார்த்தைகளையும் அனுமன் கவனிக்கிறான். இராவணன் இரப்பும் சீதையின் சீற்றமும் இங்கு இராவணனுக்கும், சீதைக்கும் ஒரு நீண்டக் கடுமையான உரையாடல் நடைபெறுகிறது. முதலில் இராவணன் சீதையைக் கெஞ்சுகிறான். அவள் மீது தனது ஆசைப்பெருக்கத்தையும்