பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் 124 >}=== காதலும் பெருங்காதலும் பிசைந்து, மரக்கிளையில் அமர்ந்துள்ளான். ஆயினும் அவன் வந்துள்ளது தூதுப் பணியில் எனவே, இங்கு அடக்கம், அமைதி, வினையம், வந்த வேலை, மேல் விளை பொருள் ஆகியவற்றை நினைவில் வைத்து ஏற்ற வகையில் செயல்பட வேண்டும். ஆயினும் அரக்கன் வரம்பு மீறிச் சென்று விட்டால், “என் முன் பேசிய நீசன், அருந்ததிக் கற்பின் என்னை ஆளுடைய நாயகன் தேவியை, கை தொடுவதன் முன் அவனைத் துகைத்து உழக்கிப் பின்னை நின்றது செய்குவேன்” எனக் கரம் பிசைந்து நின்றதைக் கம்பன் கூறுகிறான். நமது பாரத தேசத்தின் பண்பாட்டு வரலாற்றில், நமது பேரிலக்கியங்களில் வரும் சிறப்பு மிக்க தெய்வீகப் பெண்மணிகளில் சீதை, பாஞ்சாலி, கண்ணகி ஆகியோர் முக்கியமானவர்கள் என்று கூறினால், அம்மூவருக்கும் ஏற்பட்ட அநீதி வெவ்வேறு காட்சிகளைக் கொண்டவை. ஆயினும் மதுரையில் மன்னனிடம் நடந்த கொடுமையை எதிர்த்து நீதி கேட்டு வாதாடியதும், மதுரை மாநகரை தீக்கிரை யாக்கியதும், பெரியோர்களும் மூத்தவர்களும் உறவினர்களும் நிறைந்த கெளரவர்களின் சபைதனிலே பாஞ்சாலி வாதாடியதும், அசோக வனத்தில் சிறையில் வாடிய ஜானகி, அரக்கனை எதிர்த்து அவனுடைய வஞ்சகச் செயலை எதிர்த்து வாதாடியதும் பின்னர் இலங்கை நகரமே எரிந்துப்பட்டதும் பாரத நாட்டின் வரலாற்றில் நிகழ்ந்த என்றும் நமது நினைவில் நிற்கும் நிகழ்ச்சிகளாகும். மறக்கமுடியாத காட்சிகளாகும். சீதாப்பிராட்டி கடிந்து கூறிய சொற்களுக்கு, பதில் கூறியும் மேலும் அவளை பயமுறுத்திவிட்டும், அரக்கியரைத் தனியாக அழைத்து எப்படியாவது சீதையின் மனதை மாற்றும் படியும் கூறிவிட்டுச் சென்றான் இராவணன். இதையே கவிச்சக்கரவர்த்தி, “ஒன்று கேள் உரைக்க, நிற்குஓர் உயிர் என உரியோன் தன்னைக் கொன்று கோள் இழைத்தால், நீ, நின் உயிர் விடில் குற்றம் கூடும் என் தன் ஆர் உயிரும் நீங்கும்; என்பதை இயைய எண்ணி அன்று நான் வஞ்சம் செய்தது; ஆர் எனக்கு அமரில் நேர்வார்?'