பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் 125 “மூவரும் தேவர் தாமும் முரண் உக முற்றும் கொற்றம், பாவை நின் பொருட்டினால் ஓர் பழி பெறப் பயன் தீர் நோன்பின் ஆ இயல் மனிதர் தம்மை அடுகிலேன், அவரை ஈண்டுக் கூவி நின்று ஏவல் கொள்வேன்; காணுதி குதலைச் சொல்லாய்” “பதவியல் மனிதரேனும், பைந்தொடி, நின்னைத்தந்த உதவியை உணர நோக்கின், உயிர்கொலைக்கு உரியர் அல்லர் சிதைவுறல் அவ்வாக்கு வேண்டின், செய்திறன், தேர்ந்தது எண்ணின், இதம் நினக்கு ஈதே ஆகின் இயற்றுவல், காண்டி! இன்னும்” 'பள்ளநீர் அயோத்தி நண்ணிப் பரதனே முதலினோர் ஆண்டு உள்ளவர் தம்மையெல்லாம் உயிர் குடித்து ஊழித்தீயின் வெள்ள நீர் மிதிலை யோரை வேர் அறுத்து எளிதின் எய்திக் கொள்வென் நின் உயிரும்; என்னை அறிந்திலை குறைந்த நாளோய்!” என்று தமது சிறப்பான கவிதைகளில் குறிப்பிடுகிறார். நான் அன்று உனக்கு உயிரோனாக உள்ளவனைக் கொன்றிருந்தால் நீயும் உயிர் விட்டிருப்பாய், நீ எனக்குக் கிடைத்திருக்க மாட்டாய். அதனால் என் உயிரும் நீங்கியிருக்கும். அதனால் தான் உன்னை வஞ்சம் செய்து கவர்ந்து வந்தேன். தேவைப்பட்டால் இப்போது அவர்களைக் கூவி அழைத்து ஏவல் கொள்வேன். அவர்கள் உன்னை எனக்குக் கொடுத்து உதவியுள்ளார்கள். அதனால் அவர்கள் உயிர்க் கொலைக்கு உரியவர்களல்லர். அது தான் வேண்டும் என்று நீ விரும்பினால் அவர்களையும் இன்னும்