பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் 131 அன்னையே நீ இங்கு இருக்கிறாய் என்னும் செய்தியைக் கேட்டவுடன் இராமபிரானும் வானரத்தலைவனான சுக்கிரீவனும் பெருங்கடல் வழியைத் துர்த்து, மாபெரும் வானரப்படை இலங்கையை முற்றுகையிட்டு சூழ்ந்து நின்று ஆர்ப்பரிக்கும் பேரொலியைக் கேட்டு நீங்கள் மகிழ்ச்சியடையப் போகிறீர். கவலைப்படாதீர். இந்த இலங்கை நகருக்குள் பெரும் வானரப்படையுடன் எனது தோள்களில் இராம பிரானும் அங்கதன் தோள்களில் இளையவரும் அமர்ந்து வலம் வரப் போவதைக் காணப்போகிறீர்கள். கவலைப் படாதீர்கள் என்று ஆறுதல் கூறினான். சீதை மகிழ்ச்சியடைந்தாள். அனுமன் சீதையைக் கண்டதற்கு அடையாளமாகச் சீதைக்கும் இராமனுக்குமிடையில் நடந்த செய்திகளைக் கூறிக் கணையாழிக்கு ஈடாக சூடாமணியை அனுமனிடம் கொடுத்தனுப்பினாள். சீதையிடம் ஆசி பெற்று அனுமன் அப்பால் சென்றான். 18. அனுமனின் அருஞ்செயல்கள் சீதையிடம் விடை பெற்றுக் கொண்டுக் கிளம்பிய அனுமன் தான் இலங்கைக்கு வந்து சென்றதன் அறிகுறியாக ஒரு அடையாளத்தை உண்டு பண்ணிவிட்டுச் செல்ல வேண்டுமென்று விரும்பினான். இலங்கையில் அனுமன் ஆற்றிய அருஞ் செயல்களில் சோலைகளை சிதைத்ததும், தன்னை எதிர்த்த அரக்கர்களைக் கொன்றதும், இராவணனுடைய சபைக்குச் சென்றதும், அவனுக்கு அறிவுரைகள் கூறியதும், இலங்கையைத் தகனம் செய்ததும் அடங்கும். இந்த நிகழ்ச்சிகள் இராமாயணப் பெருங் காவியத்தில் முக்கிய இடம் பெறுகின்றன. இதில் கம்பர் காட்டும் காட்சிகள் உலக மகா இலக்கியங்களில் ஈடு இணையற்றதாகும். அனுமன் அங்குமிங்கும் ஆடி ஒடி மரங்களையும் மரங்கிளை களையும் ஒடித் தெரிந்துச் சோலைகளைச் சிதைத்தான். தன்னைத் தடுத்த அரக்கர்களை ஆரவாரம் செய்து அழித்தான். கிங்கரர்களை வதைத்தான். சம்பு மாலியை வதம் செய்தான். பஞ்ச சேனாபதிகளைப் போரிட்டுக் கொன்றான். அக்கனைக் கொன்றான். அதன் பின்னர்