பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.ഠ്ഞfി - M БШПТЕF5UT 133 எவ்வாறுக் காட்சி அளித்தன என்பதைக் கவிச்சக்கரவர்த்தி கம்பநாடர் மிக அற்புதமாக விவரித்துக் கூறுகிறார். அனுமனும் அரக்கனுடைய முகங்களைக் கூர்ந்து கவனித்தான். "ஊடினார் முகத்து உறுநரை ஒரு முகம் உண்ணக், கூடினார் முகக்களி நரை ஒரு முகம் குடிப்பப், பாடினார் முகத்து ஆர் அமுது ஒரு முகம் பருக, ஆடினார் முகத்து அணி அமுது ஒரு முகம் அருந்த,” “தேவரோடு இருந்து அரசியல் ஒரு முகம் செலுத்த மூவரோடு மா மாந்திரம் ஒரு முகம் முயலப், பாவகாளி தன் பாவகம் ஒரு முகம் பயிலப், பூவை சானகி நினைப்பொடும் ஒரு முகம் பொருந்த” “காந்தள் மெல்விரல் சானகி தன் கற்பு எனும் கடலை நீந்தி ஏறுவது எங்ங்ன் என்று ஒரு முகம் நினையச் சாந்து அளாவிய கோதை நன் மகளிர் தற்சூழ்ந்தார் ஏந்தும் ஆடியின் ஒரு முகம் இயல்புடன் இலங்க” என்று கவிஞர் பெருமான் தசமுகனுடைய முகங்களின் பொலிவை வர்ணித்துக் கூறுகிறார். உறுநறையும், களி நறையும் ஆர் அமுதும், அணி அமுதும் உண்டு, குடித்து, பருகி, அருந்தி, களிப்புடன் அரசியலும், ராஜதந்திர ஆட்சியும் நடத்திக் கொண்டிருந்த இராவணன் சதா சானகியின் நினைப்போடு சானகியின் கற்பு என்னும் கடலை நீந்தி ஏறுவது எங்ங்ணம் என்னும் நினைப்போடும் இருந்தான் என்பதைக் கவிஞர் குறிப்பிடுகிறார். இங்கு இராவணனுக்குச் சீதைபால் இருந்த பெருங்காதல் ஆதிக்கம் கொண்டு வெளிப்படுகிறது. இராவணனைக் கண்ட அனுமன் தீவிரமாகச் சிந்தித்தான். அவனை மோதிக் கொன்று விட வேண்டும் என்று மனம் கொதித்தான். ஆயினும் நிதானப்பட்டு தூதன் என்னும் நிலையிலேயே தனது கடமையை ஆற்றுவது நல்லது, விவேகமானது, என்று முடிவுக்கு வந்து அமைதியாக இருந்தான். இராவணன், அரச பீடத்தில் அமர்ந்து அனுமனைப் பார்த்து யார் நீ, வந்த காரணம் யாது? யார் உன்னை விடுத்தவர்?’ என்று அதட்டிக் கேட்டான். அனுமன் பதில் கூறுகிறான்.