பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.'ങ്ങfി ■ -)| ҺLITTEF67ЧТ 137 'வெறுப்பு உண்டாய ஒருத்தியை வேண்டினால் மறுப்பு உண்டாய பின், வாழ்கின்ற வாழ்வினின் உறுப்பு உண்டாய் நடு ஓங்கிய நாசியை அறுப்பு உண்டால் அது அழகு எனல் ஆகுமோ?” 'ஆதலால் தன் அரும் பெறல் செல்வமும் ஒதுபல் கிளையும் உயிரும் பெறச் சீதையைத் தருக என்று எனச் செப்பினான் . சோதியான் மகன் நிற்கு’ எனச் சொல்லினான்.” இவ்வாறு அனுமன் இராவணனிடம் எடுத்துக் கூறினான். இவை மிகக் கடுமையான பொருள் பொதிந்தச் சொற்களாகும். இராவணனுடைய காம வெறியைக் கடுமையாகக் கண்டிக்கும் சொற் களாகும். இங்கு அனுமன் இராவணனுக்குக் கூறிய அறிவுரைகள் மிக முக்கியமான அறிவுரைகளாகும். எக்காலத்திற்கும் எல்லோருக்கும் பொருந்தும் பொது நீதியும் சமுதாய நீதியுமாகும். உன் வாழக்கையை வீணாக்கி விட்டாய், அறத்தை நோக்கவில்லை தீமையே செய்தாய். உனக்கு முடிவு காலம் வந்து விட்டது. இனியாவது உன் உயிருக்கு நல்லது தேடிக் கொள்வாய்” என்று இராவணனிடம் அனுமன் அறிவுரை கூறத் தொடங்குகிறான். மனித வாழ்க்கையில் வெறும் காமக் களியாட்டங்களில் நேரத்தையும் காலத்தையும் வீணாக்காமல் தீய செய்கைகளைத் தவிர்த்து நல்ல காரியங்களைச் செய்ய வேண்டும். அதை மீறி சில தவறுகள் ஏற்படுமாயின் அவைகளைக் காலத்தில் உணர்ந்துத் திருத்திக் கொள்ள வேண்டும். உமது புலன்களை வென்று பல பெரிய தவங்களையெல்லாம் செய்து பல வரங்களையும் பெற்றுச் சிறப்படைந்தீர். ஆனால் இப்போது கற்பிற் சிறந்த துயவளான சீதைக்குத் துயர் விளைவிப்பதால் நீர் உமது தவங்களினால் பெற்றப் பலன்களை யெல்லாம் அழித்துக் கொண்டீர்கள். பாவங்கள் மூலம் புண்ணியத்தை அழிக்க முடியாது. தீமையின் மூலம் நன்மையை அழித்துவிட முடியாது. முறை கேடான காமச் செருக்கினால் அறத்தை மறந்து மதியிழந்து தாழ்வடைந்து போனவர்கள் பலரைக் கண்டிருக்கிறோம். அத்தீமை களிலிருந்து மீண்டவர்களை நாம் கண்டதில்லை.