பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும் 160 'நெடுந்தகை விடுத்த துரதன், இனையன நிரம்ப எண்ணிக் கடுங்கடல் விடமும் கூற்றும் கலந்து கால் கரமும் காட்டி விடும் சுடர் மகுடம் மின்ன, விரிகடல் இருந்தது என்னக் கொடுந்தொழில் மடங்கல் அன்னான், எதிர்சென்று குறுகி நின்றான்' என்றும் கம்பன் அங்கதன் துது சென்ற காட்சியைச் சிறப்பாகக் குறிப்பிடுகிறார். இங்கு இராவணனுடைய உள்ளத்தில் எழுந்துள்ள காம வெறியை பெருங்காதலை ஆசைப் பிணி எனக் கம்பநாடர் குறிப்பிடுவது சிறப்பாகும். == அங்கதன் இராவணன் முன்பாகப் போய் நின்றான். யார் நீ எனக் கேட்ட இராவணனிடம். பூத நாயகன், நீர் சூழ்ந்த புவிக்கு நாயகன், இப்பூமேல் சீதை நாயகன், வேறுள்ள தெய்வ நாயகன், நீ செப்பும் வேத நாயகன், மேல் நின்ற விதிக்கு நாயகன், தான் விட்ட துாதன் யான்; பணித்த மாற்றம் சொல்லிய வந்தேன்; என்றான்” என்று கூறியதைக் கம்பன் மிகச் சிறப்பாகத் தனது கவிதையில் கூறுகிறார். அங்கதனுக்கும் இராவணனுக்கும் ஒரு சிறிய அரசியல் உரையாடலும் வாக்குவாதமும் நடைபெறுகிறது. அங்கதன் கூறியதைக் கேட்ட இராவணன், "கங்கையும் பிறையும் சூடும் கண்ணுதல், கரத்து நேமி சங்கமும் தரித்த மால், மற்று இந்நகர் தன்னைச் சாரார்; அங்கவர் தம்மை அன்றி, மனிதனுக்காக அஞ்சாது இங்கு வந்து இதனைச் சொன்ன துரதன் நீ யாவன்? என்றான் இதில் இராவணனுடைய ஆணவமும் அகந்தையும் தன்னகங்காரமும் தொனிப்பதைக் காணலாம். இதற்கு ஈடாகவே அங்கதன் பதில் கூறுகிறான். 'இந்திரன் செம்மல், பண்டு ஒர் இராவணன் என்பான் தன்னைக் சுந்தரத் தோள்களோடும், வாலிடைத் துங்கச் சுற்றிச் சிந்துரக் கிரிகள் தாவித் திரிந்தனன், தேவர் உண்ண மந்திரப், பொருப்பால் வேலைக் கலங்கினான், மைந்தன்; என்றான்” அதைக் கேட்ட இராவணன், உந்தை என் துணைவன், எனக்கு உற்ற நண்பன் உன் தந்தையைக் கொன்றவன் பின்னே சென்று