பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் 165 அவர்கள் தான் கொடுக்கவும் முடியும் யாரிடம் வல்லமை இருக்கிறதோ அவரிடமுள்ள இரக்கத்திற்குத் தான் அர்த்தமுண்டு. எனவே தான் வளமும் வாழ்வும் நிறைந்த கோசலை நாட்டையுடைய வள்ளலாகிறான் இராமன். அத்துடன் போர்க்களத்தில் அவன் தனது எதிரியை நிராயுத பாணியாக்கிய வல்லமை மிக்க வீரனாக பலத்துடன் நிற்கிறான். வீரமும் அறிவாற்றலும் மிக்கவனாக நிற்கிறான். ஏற்கனவே இராமன் அனுமனுடைய தோள்களில் அமர்ந்து போர் செய்யப் புறப்பட்டதைப் பற்றிக் கூறும் போது, பாற்கடலைப் போல் நின்றான் மாருதி அதன் அகத்துறையும் நாதன் திருமாலை ஒத்தான் இராமன் என்றும், வேதம் ஒத்தான் மாருதி, வேதத்தின் முடிவிலே உள்ள அறிவை ஒத்தான் இராமன், என்று கம்பன் சிறப்பாகக் கூறிப்பிடுகிறார். எனவே போர் வலுவும் அறிவு வளமும் நிறைந்த கோசல நாடுடைய வள்ளல் இராமபிரான், எல்லாம் இழந்த இராவணன் மீது இரக்கம் கொண்டு, அவன் இந்த நிலையிலாவது திருந்துவானா என்பதை உலகறியச் செய்ய இன்று போய் போருக்கு நாளை வா’ என்று கூறி அனுப்பினான். இந்த நிகழ்ச்சியில் ஒரு இராஜ நிதியும் நிறைந்திருக்கிறது. அரசியல் அறம் அமைந்திருக்கிறது. யுத்த தருமமும் அடங்கியிருக்கிறது. சீதையை விட்டு விடும்படி இராவணனிடம் இதற்கு முன் பலரும் பல கட்டங்களிலும் எடுத்துக் கூறிவிட்டார்கள். சிவனும், திருமாலும் கூட அனுமதியின்றி உள்ளே போக முடியாத இலங்கை நகருக்குள், அத்தனை காவல்களையும் கடந்து அனுமன் நகருக்குள் சென்று, அசோக வனத்தில் சீதையைக் கண்டு விட்டு, இலங்கையின் சோலைகளையும் செடி கொடிகளையும் சிதைத்து, தன்னை எதிர்க்க வந்த அரக்கர்களைக் கொன்று, இராவணனுடைய சபைக்குச் சென்று இராமனுடைய தூதனாக நின்று, சீதையை விட்டு விடும்படி அரக்கனுக்கு அறிவுரை கூறினான். இராவணனுடைய மந்திராலோசனை சபையில் கும்பகருணன், வீடணன், மாலியவான், முதலானோரும் இலங்கை வேந்தனுக்கு சீதையை விட்டு விடும்படி அறிவுரை கூறினர். போர் தொடங்கும் முன்பு அங்கதனைத் துTதனுப்பி இராமன் “தேவியை விடுதியோ அன்றேல் ஆவியை விடுதியோ” என்று கூறிப் பாாததான.