பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் 188 >>==== காதலும் பெருங்காதலும் 'கண்டனென் இராவணன் தன்னைக் கண்களால் மண்டமர் புரிந்தனென், வலியின், ஆர் உயிர் கொண்டிலன், உறவு எலாம் கொடுத்து மாள நான் பண்டுடைத் தீவினை பயந்த பண்பினால்’’ ‘'தேவர்தம் படைக்கலம் தொடுத்துத் தீயவன் சாவது காண்டும்; என்று இளவல் சாற்றவும் ஆவதை இசைத்திலென்; அழிவது என்வயின் மேவுதல் உறுவது ஒர் விதியின் வெம்மையால் “இளையவன் இறந்த பின் எவரும் என்? எனக்கு அளவறு கீர்த்தி என்? அறம் என்? ஆண்மை என்? கிளையுறு சுற்றம் என்? அரசு என்? கேண்மை என்? விளைவு தான் என்? மறைவிதி என்? மெய்மை என்? “தாதையை இழந்த பின், சடாயு இற்றபின், காதல் இன்துணைவரும் மடியக் காத்து உழல் கோது அறு தம்பியும் விளியக், கோள் இலன் சீதையை உகந்துளான் என்பர் சீரியோர்' என்றெல்லாம் மனம் வருந்தித் தான் உயிர் மாய்த்துக் கொள்வதே மேல் என்று துணிகிறான். அப்போது சாம்பவன் அனுமன் உணர்வு பெற்றுள்ளான் அவன் மேரு மலைக்கப்பால் வடதிசை போய் உள்ளான். விரைவில் மருந்துகளுடன் திரும்புவான். அம்மருந்துகளால் அனைவரும் உயிர் பெற்று எழுவர் என்று கூறிக் கொண்டிருந்த போது மாருதி மலையுடன் வந்து அம்மலையை ஆகாயத்தில் நிறுத்தி விட்டு அவன் மட்டும் நிலத்தில் இறங்கினான். அப்போது மருத்துவ மலையின் காற்று பட்டவுடன் மாண்டவர் அனைவரும் உயிர் பெற்று எழுந்தனர். இலக்குவனை இராமன் தழுவிக் கொண்டான். அனைவரும் அனுமனை வாழ்த்தினர்.