பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் 195 செலுத்த வல்லவன். இலக்குவனையும் வானரப் படைகளையும் கூட இரு தடவை வீழ்த்தியவன். தனது சொந்த அனுபவத்தில் உண்மையை உணர்ந்து தன் தந்தையிடம் நிஜத்தைப் பேசினான். தெளிவோடும் பேசினான். தன்னிடம் ஏற்பட்ட பயத்தால் பேசவில்லை. தன் தந்தை மீதிருந்த அன்பின் மிகுதியால் பேசினான். இந்திர சித்தனை 'உலகெல்லாம் கலக்கி வென்றவன்’ என்று கம்பன் சிறப்பாக குறிப்பிடுகிறார். அம்மேகநாதன் தன் தந்தையிடம் பேசுகிறான். 'முட்டிய செருவில் முன்னம், முதலவன் படையை என் மேல் விட்டிலன் உலகை அஞ்சி! ஆதலால் வென்று மீண்டேன்; கிட்டிய போதும் காத்தான்! இன்னமும் கிளர வல்லான்; சுட்டிய வலியினாலே கோறலைத் துணிந்து நின்றான்' "ஆதலால் அஞ்சினேன் என்று அருளலை; ஆசைதான் அச் சீதைபால் விடுவையாயின் அனையவர் சீற்றம் தீர்வர்; போதலும் புரிவர், செய்த தீமையும் பொறுப்பர், உன்மேல் காதலால் உரைத்தேன், என்றான்; உலகெலாம் கலக்கி வென்றான்” என்பது கம்பனுடைய சிறப்பு மிக்க கவிதைகளாகும். இங்கு இந்திரசித்தனும் இராவணனிடம் அச்சீதைபாலுள்ள ஆசையை விடும்படி கூறுகிறான். இராவணன் பலமாகச் சிரித்தான். தன் மகனிடம் கூறினான் 'இயம்பலும் இலங்கை வேந்தன் எயிற்று இளநிலவு தோன்றப் புயங்களும் குலுங்கநக்குப் போர்க்கு இனி ஒழிநீ போத மயங்கினை மனமும்; அஞ்சி வருந்தினை வருந்தல் ஐய! சயங்கொடு தருவென் இன்றே மனிதரைத் தனு ஒன்றாலே” 'நீ இனி போருக்குப் போக வேண்டாம், மனம் மயங்கி விட்டாய் உனக்கு அச்சம் ஏற்பட்டு வருத்தம் கொண்டு விட்டாய், நானே நேரில் சென்று அம்மனிதரைக் கொன்று வெற்றி கொள்வேன்’ என்று இராவணன் வணங்கா முடியனாய் தனக்கே உரிய கம்பீரத்துடன் பேசுகிறான். கவிச்சக்கரவர்த்தி கம்பன் தரும் காட்சிகளில் இது ஒரு அற்புதமான காட்சியாகும். உலகப் பேரிலக்கியங்களில் எங்கும் காணாத ஒர் அதி அற்புதமான காட்சியாகும். இராவணன் ஒரு