பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அசினிவாசன் 199 வம்பு செரிந்த மலர்க் கோயில் மறையோன் படைத்த மாநிலத்தில் தம்பியுடையான் பகை அஞ்சான்’ என்னும் மாற்றம் தந்தனையால்” என்றும் கூறிப் பாராட்டினான். இராவணன் தன் மகன் போர்க்களத்தில் மாண்ட செய்தி கேட்டு பெரும் துக்கம் அடைந்தான். "சினத்தோடும் கொற்றம் முற்ற இந்திரன் செல்வம் மேவ நினைத்து முடித்து நின்றேன்; நேர் இழை ஒருத்தி நீரால் எனக்கு நீ செய்யத்தக்கக் கடன் எலாம் ஏங்கி ஏங்கி உனக்கு நான் செய்வது ஆனேன், என்னின் யார் உலகத்து உள்ளார்' என்று சோகமுற்றான். மேகநாதனை ஈன்றெடுத்த தாய் மண்டோதரி தேவி தன் மகன் ாண்ட செய்தி கேட்டு மயங்கி அழுதாள் 'பஞ்சு எரி உற்றது என்ன அரக்கர்தம் பரவை எல்லாம் வெஞ்சின மனிதர் கொல்ல விளிந்ததே மீண்டதில்லை; அஞ்சினேன்! அஞ்சினேன் அச்சீதை என்ற அமுதால் செய்த நஞ்சினால் இலங்கை வேந்தன் நாளை இத்தகையன் அன்றோ?' என்று புலம்பி அழுகிறாள். இராவணன் தன் மகன் மாண்ட செய்தியைக் கேட்ட ஆத்திரத்தில் சீதையைக் கொல்வேன் என்று சினம் கொண்டு ஒடினான். அப்போது அவனுடைய முதலமைச்சன் மகோதரன் அவனைத் தடுத்து அவனை வணங்கி 'சீதையைக் கொல்வதால் தீராத பழி வந்து சேரும் அத்துடன் நாளைப் போர்க்களத்தில் நீ இராமனை வென்று திரும்பும் போது சீதை இல்லாமல் போனால் நீ கொண்ட முயற்சி என்னவாகும், என்று அவனுடைய உள்ளத்தில் பீதைபால் இருந்த உணர்வையும் கிளப்பி விடுகிறான். 'நீர் உளதனையும் சூழ்ந்த நெருப்புளதனையும், நீண்ட பார் உளதனையும் வானப் பரப்புள தனையும், காலின் போர் உளதனையும், பேராப் பெரும்பழி பிடித்தி போலாம்; போர் உளதனையும் வென்று, புகழ் உளதனையும் உள்ளாய்!”