பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் 2O7 "ஒராதே ஒருவன்தன் உயிராசைக் குலமகள் மேல் உடைய காதல் தீராத வசை என்றேன்; ள்னை முனிந்த முனிவு ஆறித் தேறினாயோ? போர் ஆசைப் பட்டெழுந்த குலம் முற்றும் பொன்றவும் தான் பொங்கி நின்ற பேராசை பெயர்ந்த தோ?பெயர்ந்து ஆசைக் கரி இரியப் புருவம் பேர்த்தாய்” 'போர் மகளைக் கலை மகளைப் புகழ் மகளைத் தழுவியகை பொறாமை கூரச் சீர்மகளைத் திருமகளைத் தேவர்க்கும் தம் மோயைத் தெய்வக் கற்பின் பேர்மகளைத் தழுவுவான் உயிர் கொடுத்துப் பழி கொண்ட பித்தா! பின்னைப் பார்மகளைத் தழுவினையோ! திசையானை மறுப்பு இறுத்த பனைத்த மார்பால்’’ என்று கூறி வீடணன் புலம்புகிறான். இன்னும் இராவணனுடைய மனைவியர், அறம் தொலைவுற மனத்து அடைத்த சீதை மறந்திலையோ இனும் எமக்கு உன் வாய் மலர் திறந்திலை விழித்திலை, அருளும் செய்கிலை, இறந்தனையோ’’ என இரங்கி ஏங்கினர். மண்டோதரி தேவி இராவணனடைய முதல் மனைவி பட்ட மகிஷி. மாவீரன் மேகநாதனைப் பெற்ற தாய். கற்பிற் சிறந்தவள். தன் கணவன் மீது நீங்காத அன்பு கொண்டவள். இராவணனடைய உடல் மீது விழுந்து புலம்பித் தானும் உயிர் விடுகிறாள். 'வெள் எருக்கம் சடை முடியான் வெற்பு எடுத்த திருமேனி, மேலு கீழும் எள் இருக்கும் இடன் இன்றி, உயிர் இருக்கும் இடம் நாடி இழைத்தவாறோ ! கள் இருக்கும் மலர்க் கூந்தல் சானகியை மனச் சிறையில் காந்த காதல் உள் இருக்கும் எனக் கருதி உடல் புகுந்து தடவிய தோ ஒருவன் வாளி' என்றும்,