பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/253

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் 212 الحجصلإح காதலும் பெருங்காதலும் என்று கம்ப நாடர் அடுத்து வரும் வரலாறு முழுவதையும் இந்த நான்கு வரிகளில் குறிப் பிடுவதைக் காண்கிறோம். இங்கு தையலின் கற்பு, இரமபிரானின் தகவு (பெருந் தன்மை) தம்பி, அவர்களின் கருணை உணர்வு, வாய்மை வில்லின் வல்லமை அனைத்தும் வனவாசத்தை முடித்து இப்போது இலங்கையின் களத்திலே நிற்கிறது. சீதை தீப்புகத் தயாரானாள். அதைக் கண்டு நான்கு மறைகளும் நல்லறமும் மற்ற உயிர்கள் யாவையும் அரற்றின. சீதை தீ புகுந்தாள், 'கணத்தினால் கடந்த பூண்முலைய கை வளை மனத்தினால், வாக்கினால், மறுவுற்றேன். எனில் சினத்தினால் சுடுதியால் தீச் செல்வா' என்றாள் புனைத்துழாய்க் கணவற்கும் வணக்கம் போக்கினாள்” என்று கூறி சீதா தீக்குள் புகுந்தாள். அப்போது அன்னை சீதையின் கற்பின் தீயினால் அவள் புகுந்த தீ அவிந்தது. 'நீந்தரும் புனலிடை நிவந்த தாமரை ஏய்ந்த தன் கோயிலே எய்துவாள் எனப் பாய்ந்தனள், பாய்தலும் பாலின் பஞ்சு எனத் தீய்ந்தது அவ்வெரி, அவள் கற்பின் தீயினால்’’ என்று கம்ப நாடர் மிகவும் உருக்கமாகக் குறிப்பிடுகிறார். 'பெய்யுமே மழை? புவி பிளப்பது அன்றியே செய்யுமே பொறை? அறம் நெறியில் செல்லுமே? உய்யுமே உலகு? இவள் உணர்வு சீறினால் வையுமேல் மலர் மிசை அயனும் மாயுமே” என்று அன்னையைக் கைகளால் தாங்கிய தீக்கடவுள் கூறுகிறார். 'இனையது ஆகலின், எமையும், மூன்று உலகையும் ஈன்று மனையின் மாட்சியை வளர்த்த எம் மோயினை, வாளா முனையல் என்று அது முடித்தனன்; முந்து நீர் முளைத்த சினையின் பந்தமும், பகுதிகள் அனைத்தையும் செய்தோன்' என்றும், நான்முகன் கூறியது பற்றியும்