பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் 214 >}=== காதலும் பெருங்காதலும் அதைத் தொடர்ந்து வழியில் கிட்கிந்தைக்கும் பரத்துவாசன் ஆசிரமத்திற்கும் சென்று தங்கி நந்தியம் பதிக்குச் சென்று பரதனையும் இளையோனையும் தாய்மார்களையும் சந்தித்து மகிழ்ச்சி கொண்டனர். எல்லோரும் சேர்ந்து அயோத்தி அடைந்தனர். 'அரியணை அனுமன் தாங்க, அங்கதன் உடைவாள் ஏந்தப் பரதன் வெண் குடை கவிக்க இருவரும் கவரிவீச, விரை செறி குழலி ஓங்க, வெண்ணையூர்ச் சடையன் தங்கள் மரபுளோர் கொடுக்க வாங்கி, வசிட்டனே புனைந்தான் மெளலி” இவ்வாறு மிகவும் சிறப்பாக இராமபிரானுக்கு முடிசூட்டு விழா நடைபெற்றது. இராமபிரான் அரசு பொருப்பு ஏற்று, 'விரத நூல் முனிவன் சொன்ன விதிமுறை வழாமை நோக்கி வரதனும் இளைஞர்க்கு ஆங்கண் மாமணி மகுடம் சூட்டிப் பரதனைத் தனது செங்கோல் நடாவுறப் பணித்து, நாளும் கரை தெரிவு இலாத போகக் களிப்பினுள் இருந்தான் மன்னோ” என்று கம்பநாடர் குறிப்பிடுகிறார். “மறையவர் வாழி! வேத மனு நெறி வாழி, நன்னூல் முறை செயும் அரசர், திங்கள் மும்மழை வாழி, மெய்ம்மை இறையவன் இராமன் வாழி! இக்கதை கேட்போர் வாழி! அறை புகழ்ச் சடையன் வாழி! அரும்புகழ் அனுமன் வாழி! என்றும், 'இராவணன் தன்னை வீட்டி இராமனாய் வந்து தோன்றித் தராதலம் முழுதும் காத்துத் தம்பியும் தானும் ஆகப் பராபரம் ஆகி நின்ற பண்பினைப் பகருவார்கள் நராபதி ஆகிப் பின்னும் நமனையும் வெல்லுவாரே'