பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் 215 என்று வாழ்த்துக் கூறிக் கம்பநாடர் தனது மகா காவியத்தை நிறைவு செய்கிறார். கம்பர் வாழ்க. கம்பர் புகழ் வாழ்க, கன்னித் தமிழ் வாழ்க. 35. தொகுப்புரை (1) பெண்ணாசை, பெண்ணாட்டம், பெருங்காதல் இராமாயண மகாகாவியத்தில் தசரதனும், வலியும், இராவணனும் அயோத்தி, கிஷ்கிந்தை இலங்கை ஆகிய நகரங்களை ஆண்ட மன்னர்கள். ஆட்சி பொருப்பில் இருந்த அரசர்கள் மூவரின் மரணத்திற்கும் பெண்களே காரணமாக இருந்தனர். தயரத மாமன்னன் கைகேயி பால் கொண்டிருந்த பெருங்காதல் காரணமாக வரம் கொடுத்த விளைவுகளும், வாலி தனது ஆட்சியில் மனையில் மாட்சியை அழித்த காரணத்தால் ஏற்பட்ட விளைவுகளும் மிகவும் நுட்பமாகக் குறிப்பிடப்படுகின்றன. அவை காரணமாக கதையில் முக்கிய திருப்பங்களும் ஏற்படுகின்றன. இராமபிரானும் சீதையின் பால் வைத்திருந்த அன்பின் மிகுதி காரணமாக மாயமானைத் தேடிச் சென்ற விளைவுகளும் கதையில் முக்கிய திருப்பங்களுக்கு காரணமாகின்றன. இந்த மகாகாவியத்தின் முக்கிய பகுதியாக இராவணன் சீதைபால் கொண்ட பெண்ணாசையும், பெண்ணாட்டமும் காம நோயும் பெருங்காதலும் அதன் காரணமாக அவன் செய்த கொடுமையும் அதன் விளைவாக எற்பட்ட போரும் பெரு நாசங்களும் விரிவு படக் கூறப் படுகின்றன. காவியத்தின் தொடக்கத்திலேயே கவிப் பேரரசன் கம்ப நாடர் கோசல நாட்டின் ஆற்றணியைப் பற்றி கூறத் தொடங்கும் போது மெய் வாய் கண் மூக்கு செவி எனும் ஐம் புலன்களினால் எற்படும் ஆசைகளாகிய வாளியும் (அம்புகளும்) பொன்மணி மாலைகள் கிடந்து அசைகின்ற முலையவர் கண் எனும் பூசல் அம்பும் நெறியும்