பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- கம்பநாடன் காவியத்தில் 222 =தி- காதலும் பெருங்காதலும் இங்கு கம்பநாடன் சூர்ப்பனகையின் மனப் போக்கைச் சித்தரிக்கிறார். ஒரு பெண்ணிற்கு அவளுடைய உள்ளத்தில் ஒரு வம்மம் ஏற்பட்டு விட்டால் ஒரு பழி தீர்க்கும் மனோ நிலையும் அதில் உறுதிப்பாடும் ஏற்பட்டு விட்டால் அவள் எந்த அளவுக்குச் செல்வாள் என்பதைச் சூர்ப்பனகை மூலம் காண்கிறோம். "எண்தகு இமையவர், அரக்கர் எங்கள்மேல் விண்டனர்; விலக்குதி என்ன, மேலை நாள் அண்டசத்து அருந்துயில் துறந்து ஐயனைக் கண்டனன்; தன்கிளைக்கு இறுதி காட்டுவாள்” இராவணன் போர்க் களத்தில் மாண்டு கிடந்த போது அவன் மீது விழுந்து வீடணன் அழுதான். அப்போது வீடணன் 'கொல்லாத மைத்துனனைக் கொன்றாய் என்று அது குறித்துக் கொடுமை சூழ்ந்து பல்லாலே இதழ் அதுக்கும் கொடும் பாவி நெடும்பாரப்பழி தீர்த்தாளோ? என்று குறிப்பிட்டதை இங்கு நினைவு கொள்ளலாம். இனி போகப் போக சூர்ப்பனகையின் நடவடிக்கைகளைக் காணலாம். சூர்ப்பனகை இராமனைக் கண்ட போது 'கற்றை அம் சடையவன், கண்ணில் காய்தலால் இற்றவன், அன்று தொட்டு இன்று காறும், தான் நற்றவம் இயற்றி, அவ் அநங்கன் நல் உருப் பெற்றனன் ஆம்; எனப் பெயர்த்தும் எண்ணினாள்' என்றும், “அதிகம் நின்று ஒளிரும் இவ் அழகன் ஆண்முகம் பொதி அவிழ் தாமரைப் பூவை ஒப்பதோ! கதிர்மதி ஆம் எனின் கலைகள் தேயும்; அம் மதி எனின் அதற்கும் ஓர் மறு உண்டு என்றும் ஆல்” இன்னும் பலவாறு சிந்தனை செய்தாள். "நீத்தமும் வானமும் குறுக, நெஞ்சிடைக் கோத்த அன்பு உணர்விடைக் குளிப்ப மீக்கொள ஏத்தவும் பரிவின் ஒன்று ஈகலான், பொருள் காத்தவன் புகழ் எனத் தேயும் கற்பினாள்' என்று கம்பன் குறிப்பிடுகிறார்.