பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.சி அ.சீனிவாசன் 225 “காவியோ கயலோ எனும் கண்ணினைத் தேவியோ திருமங்கையின் செவ்வியாள்; பாவியேனையும் பார்க்கும் கொலோ வெனும்; ஆவி ஒயினும் ஆசையின் ஒய்விலாள்" என்பது கம்பரின் பாடல். சூர்ப்பனகை தனது காதலுக்குச் சீதை குறுக்கே நிற்பதாகக் கருதி அவளைத் தொடர்ந்த போது இளையவன் குறுக்கிட்டு அவளை அங்கச் சேதம் செய்தான். அதனால் அவள் மண்ணிடை விழுந்து அழுது “பெண் பிறந்தேன் பட்ட பிழை எனப் பிதற்றினாள்” எனக் குறிப்பிடுகிறார். இலக்குவன் குறிக்கிட்டு சூர்ப்பனகையின் மூக்கையும் இதர உறுப்புகளையும் அறுத்த போது அவள் உண்மை உரு பெற்று அழுது புரண்டு இராமனிடம் மீண்டும் பேசுகிறாள். அப்போது 'குலத்தாலும், நலத்தாலும், குறித்தனவே கொணரதக்க வலத்தாலும், மதியாலும், வடிவாலும், மடத்தாலும் நிலத்தாரும் விசும்பாரும், நேரிழையார் என்னைப் போல் சொல்லத்தான் இங்கு உரியாரைச் சொல்லிரோ வல்லிரேல்' என்று தனது பேராற்றலைக் குறிப்பிட்டு நாசி போனதால் எனது பெண்மைக்குப் பழுதில்லை விண்டாரே அல்லாரோ வேண்டாதார்; மனம் வேண்டின் உண்டாய காதலின் என் உயிர் என்பது உமது அன்றோ? கண்டாரே காதலிக்கும் கட்டழகும் விடம் அன்றோ, கொண்டாரே கொண்டாடும் உருப் பெற்றால் கொள்ளிரோ' என்றெல்லாம் தனது பெரும் காதலை வெளிப்படுத்திப் பேசுகிறாள். சூர்ப்பனகையின் ஒருதலைப் பெருங்காதல் உணர்வுகளைப் பற்றி மிகவும் நுட்பமாகக் கம்பர் விவரித்துக் காட்டுகிறார். சூர்ப்பனகை தனது அழுகையின் போது கூட இராம இலக்குவர்களைப் பற்றி தாபதர்கள் என்றும் உருப்பொடிய மன்மதரை ஒத்துளரே என்றும் இன்னும் கரனிடம் அவர்களைப் பற்றிக் கூறும் போது