பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் 227 ஆர்ஒருவர் அன்னவரை ஒப்பவர்கள்? ஐயா ஓர்ஒருவரே முதல்வர் மூவரையும் வெல்வார்” “தராவலய நேமி உழவன் தயரதப்பேர்ப் பராவரு நலத் தொருவன் மைந்தர்; பழியில்லார் விராவரு வனத்து அவன் விளம்ப உறைகின்றார்; இராமனும் இலக்குவனும் என்பர் பெயர் என்றாள்' என்றெல்லாம் குறிப்பிட்டு மற்றும் அவனிடம் சீதையின் பேரழகை விவரித்து அவள் மீது அவனுக்கு பெருங்காதலைத் தூண்டி விட்டுக் கடைசியில் நீ சீதையை எடுத்துக் கொண்டு இராமனை எனக்குத் தருவாய்' என்று கூறுகிறாள். இதில் சூர்ப்பனகையின் உள்ளக்கிடக்கையும் அவளுடைய ஒரு தலைக்காதல் உணர்வும் தெளிவாகப் புலப்படுகிறது. இதைக் கம்பன் மிகவும் நுட்பமாக விவரித்துக் கூறுவதைக் காண்கிறோம். இராவணனுக்கு ஏற்பட்ட பெருங்காதல் நோய் இராவணனுடைய உள்ளத்தில் சீதையின் பாலான காமப் பெரு நெருப்பை சூர்ப்பனகை மூட்டி விட்டாள். அப்பெரு நெருப்பு அவனுடைய உள்ளத்தில் பற்றி எரிந்து பரவியது. அது பற்றி 'கோபமும் மறனும், மானக் கொதிப்பும், என்று இனைய எல்லாம் பாபம் நின்னிடத்து நில்லாத் தன்மம் போல், பற்று விட்ட தீபம் ஒன்று ஒன்றையுற்றால் என்னலாம் செயலில் புக்க தாபமும் காம நோயும் ஆருயிர் கலந்த அன்றே” எனறும “சிற்றிடைச் சீதை என்னும் நாமமும் சிந்தை தானும் உற்றிரண்டு ஒன்றாய் நின்றால், ஒன்றொழித்து ஒன்றை உன்ன மற்றொரு மனமும் உண்டோ? மறக்கலாம் வழி மற்று யாதோ? கற்றனர் ஞானம் இன்றேல் காமத்தைக் கடக் கலாமோ? என்றும் “மயிலுடைச் சாயலாளை வஞ்சியா முன்னம் நீண்ட எயில் உடை இலங்கை நாதன் இதயமாம் சிறையில் வைத்தான்