பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/281

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் 241 தக்கான் அவனுடைய உள்ளத்தில் குடி கொண்டு தங்கிய காதல் தன்மை நோயும் நின் முனிவும் அல்லால் அவனை வெல்வது அரிது. உன்னைத் தவிர வேறு யாராலும் அவனை வெல்ல முடியாது” என்று இராமபிரானிடம் எடுத்து உரைத்தான். இராவணனுடைய உடல் மீது விழுந்து வீடணன் அழுதான். 'உண்ணாதே உயிர் உண்ணாது ஒரு நஞ்சு சானகி என்னும் பெருநஞ்சு உன்னைக் கண்ணாலே நோக்கவே போக்கியதே உயிர் நீயும் களப்பட்டாயே’’என்றும் "ஒராதே ஒருவன் தன் உயிர் ஆசைக் குலமகள் மேல் உடைய காதல் தீராத வசை என்றேன் எனை முனிந்த முனிவு ஆறித்தேறினாயோ? என்றும் 'தெய்வக் கற்பின் பேர் மகளைத் தழுவுவான் உயிர் கொடுத்துப் பழி கொண்ட பித்தா” என்றும் கூறி அழுததைக் கம்பன் குறிப்பிடுகிறார். மண்டோதரி புலம்பினாள், அவள் “வெள் எருக்கம் சடை முடியான் வெற்பு எடுத்த திருமேனி, மேலும் கீழும் எள் இருக்கும் இடன் இன்றி, உயிர் இருக்கும் இடம்நாடி இழைத்த வாறோ ! கள் இருக்கும் மலர்க் கூந்தல் சானகியை மனச் சிறையில் கரந்த காதல் உள் இருக்கும் எனக் கருதி உடல் புகுந்து தடவிய தோ ஒருவன் வாளி?’’ என்றும் “அறை கடையிட்டு அமைவுற்ற முக்கோடி ஆயுவும், பேர் அறிஞர்க்கேயும் உரை கடையிட்டு அளப்பரிய பேராற்றல் தோள் ஆற்றற்கு உலப்போ இல்லை திரை கடையிட்டு அளப்பரி வரம் என்னும் பாற்கடலைச் சீதை என்னும் பிரை கடையிட்டு அழிப்பதனை அறிந்தேனோ தவப்பயன் நின் பெருமை பார்ப்பேன்?’’ என்று அலரிப் புடைத்து மண்டோதரி தனது கணவன் உடல் மீது விழுந்து உயிர் விட்டாள்.