பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் 248 تحجلإصلاح காதலும் பெருங்காதலும் அகலிகை பற்றி இராமனுடைய கால் துகள் பட்டுக் கல்லாயிருந்த அகலிகை தனி உயிர் வடிவைப் பெற்றாள். அவளுடைய கதையைக் கேட்ட இராமன் அவளை அழைத்துக் கொண்டு போய் அவளுடைய கணவன் கேளதம முனிவனிடம் கொண்டு போய்ச் சேர்த்தான். குணங்களால் உயர்ந்த வள்ளல் (இராமன்), கோதமன், கமலத் தாள்களை வணங்கினான். வலங் கொண்டு ஏத்தி மாசறு கற்பின் மிக்க அணங்கினை அவன் கையிந்து ஆண்டு அருந் தவத்தனோடும் (விசுவாமித்திரனோடு) வாச மணம் கிளர் சோலை நீங்கி மணிமதில் கிடக்கை (மிதிலை) கண்டார் என்று கம்பர் குறிப்பிடுகிறார். அகலிகை நெஞ்சாரப் பிழை செய்யவில்லை. எனவே மாசறு கற்பின் மிக்கவள் என்று இராமன் வாயால் கம்பநாடர் குறிப்பிடுகிறார். இராமன் மிதிலையில் சிலை வளைத்தான் என்னும் செய்தி கேட்டு திருமண உறுதி செய்தவற்காக தசரதனும் அவனுடைய படை பரிவாரங்களும் மிதிலையை நோக்கிச் செல்கின்றனர். அதில் குலகுரு வசிட்டர் முத்துச் சிவிகையில் சென்றான் என்பதை “கற்பின் அருந்ததி கணவன் முத்துச் சிவிகையில் அன்னம் ஊரும் திசை முகம் என்னச் சென்றான்” என்று கம்பர் குறிப்பிடுகிறார். பால காண்டம் பூக்கொய் படலத்தில் “ஊறு இல்ஞானத்து உயர்ந்தவர் ஆயினும் வீறுசேர் (அழகு பொருந்திய) முலை மாதரை வெல்வரோ?” என்று மாதரின் மேன்மையை பன்முகச் சக்தியை உயர்த்திக் கம்பன் பேசுகிறார். சீதை மணப் பெண்ணாக உறுதிப் படுத்தப்படுகிறாள். அவளுடைய உள்ளத்திலே மகிழ்ச்சி பொங்கியிருக்கிறது. இராமனும் மகிழ்ச்சி பொங்கியிருக்கிறான். இங்கு சீதையைப் பற்றிக் குறிப்பிடும் போது அருந்ததி அனைய கற்பின் நங்கையும் நம்பி ஒத்தாள்’ என்று கம்ப நாடர் குறிப்பிடுகிறார். திருமண நிகழ்ச்சிகளில் தீயை வலம் வந்து வணங்குதலும் அம்மி மிதித்து அருந்ததி காணலும் நமது மரபும் பண்பாட்டின் பகுதியும் ஆகும். இதைக் கவிஞர் மிக அழகாகக் குறிப்பிடுகிறார்.