பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/292

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் 252 >}=== காதலும் பெருங்காதலும் பரதன் அயோத்தியில் அயோத்திக்குத் திரும்பிய பரதன் தன் தந்தை இறந்தது கண்டும் இராமன் காட்டுக்குச் சென்றது கேட்டும் துடித்தான். அதற்குத் தனது தாய் காரணமாக இருந்தாள் என்பதைக் கேட்டுத் தன்னையும் தனது தாயையும் நிந்தனை செய்து கொண்டான். கோசலையிடம் சென்று கதரினான். பரதனின் நிலையைக் கண்டு கோசலை உள்ளம் நெகிழ்ந்தாள் “இவன் மிகுந்த துன்பத்தை அடைந்துள்ளான். இவன் அரச பாரத்தை ஏற்று நடத்த மாட்டான். இவனுடைய உள்ளம் தூய்மையானது என்று மிக்கப் பொறுமையுடன் மனம் தளர்ந்தாள். அவ்வாறு இருந்த கோசலையை ‘குலம் பொறை, கற்பு இவை சுமந்த கோசலை, என்று கம்பன் குறிப்பிடுகிறார். “புலம்புறு குரிசில் தன் புலர்வு நோக்கினாள் குலம், பொறை, கற்பு இவை சுமந்த கோசலை; நிலம் பொறை, ஆற்றலன், நெஞ்சம் தூயது எனாச் சலம் பிறிது உற மனம் தளர்ந்து கூறுவாள்' என்று கம்பர் கூறுகிறார். பரதனும் இராமனும் பரதன் காட்டிற்குச் சென்று இராமனைச் சந்தித்தான். தந்தை தசரதன் இறந்த செய்தியைக் கூறினான். அதைக் கேட்டு இராமன் துக்கத்தால் மயங்கினான். அனைவரும் இராமனுக்கு ஆறுதல் கூறினர். வசிட்டன் ஆறுதல் கூறினான். இறத்தலும் பிறத்தலும் இயற்கையே "சூலமும் திகிரியும் சொல்லும் தாங்கிய மும் மூர்த்திகள் ஆனாலும் காலம் என்பதைக் கடக்கல் ஆகுமோ?” என்று கூறி இராமனைத் தேற்றினான். 'பெறுவதன்முன், உயிர் பிரிதல் காண்டியால் மறுவறு கற்பினில் வையம் யாவையும் அறுவதி னாயிரம் ஆண்டும், ஆண்டவன் இறுவது கண்டு, அவற்கு இரங்கல் வேண்டுமோ?” என்று வசிட்டன் கூறுகிறார். இங்கு மறுவறு கற்பினில் என்பது குற்றமற்ற கல்வி கேள்விகளால் என்று பொருள்படுகிறது. எனவே கற்பு என்பதற்கு கல்வி கேள்விகளில் சிறப்பு நிலை என்பதும் பொருளாகிறது.