பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/296

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் 256 تدخلإصلاح காதலும் பெருங்காதலும் கொடி ஒடிந்த வில் ஒன்று, சூலம், அம்பறாத் தூணி, கவசம் ரத்த வெள்ளத்தில் கிடந்த தேர்ப்பாகன் குதிரை, குண்டலங்கள் மற்ற அணிகலன்கள் கிடப்பதை அடையாளமாகக் கொண்டுத் தெற்கு நோக்கிச் சென்றனர். அங்கு ஒரு கடுமையான போர் நடத்திருப்பதற்கான அடையாளங்கள் தென்பட்டன. கடைசியில் சற்றுத் தூரத்தில் சடாயு குற்றுயிராகக் கிடப்பதைக் கண்டனர். சடாயுவைக் கண்ட இராமன் அலரி அழுதான். தன்னால் மற்றவர்களுக்கு ஏற்பட்ட தொல்லைகளை நினைத்துக் கதறினான். சடாயு கண் விழித்துப் பார்த்தான். இருவரையும் கண்டான். அருகில் அழைத்து அவர்களைத் தழுவி உச்சி மோந்தான். ஆறுதல் கூறினான். சீதையை இராவணன் துக்கிச் சென்றது பற்றியும் தான் தடுத்தது பற்றியும் தனது சிறகுகள் அரக்கனுடைய வாளால் வெட்டுண்டது பற்றியும் விவரமாக இருவரிடமும் சடாயு கூறினான். இராமன் அவைகளைக் கேட்டவுடன் கடும் சினம் கொண்டான். உலகம் அதிர்ந்தது. சடாயுவும் ஆறுதல் கூறினான். சீதையை வனத்தில் தனியே விட்டு விட்டு நீங்கள் மானின் பின் போனது உங்கள் குற்றமே அன்றி உலகின் குற்றமன்று. ஆதலால் முனிவாய் அல்லை. “ஆதலால் முனிவாய் அல்லை; அருந்ததி அனைய கற்பின் காதலாள் துயரம் நீக்கித் தேவர் தம் கருத்து முற்றி, வேத நூல் முறையின் யாவும் விதியுளி நிறுவி, வேறும் தீதுள துடைத்தி என்றான், சேவடிக் கமலம் சேர்வான்' இங்கு சடாயு மிக முக்கியமானதொரு கருத்தை முன் வைக்கிறான். சடாயு இராமனிடம் சீதையின் துயரைத் துடைப்பதுடன் வேத நூல் முறைகளை உலகில் நிலை நாட்டி தீமைகளைத் துடைத்துத் தனது அவதாரக் கடமைகளை நிறைவேற்றுவது பற்றி நினைவூட்டுவதைக் காணமுடிகிறது.