பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/302

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் 262 تحجد تج- காதலும் பெருங்காதலும் சீதை சீற்றத்துடன் இராவணனைக் கண்டித்துப் பேசுகிறாள். அறிவு காட்டி இடித்துப் பேசுகிறாள். இராவணன் கடும் கோபத்துடன் இவளைப் பிளந்து தின்பேன் என்று உறுமுகிறான். அப்போது அனுமன் கரம் பிசைந்து. 'அன்னகாலையில், அனுமனும், அருந்ததிக் கற்பின் என்னை ஆளுடை நாயகன் தேவியை, என்முன் சொன்ன நீசன், கை தொடுவதன் முன் துகைத்து உழக்கிப் பின்னை நின்றது செய்குவென் என்பது பிடித்தான்' இராவணன் சீதையை பயமுறுத்தி விட்டு காவல் அரக்கியரைத் தனியாக அழைத்து எப்படியாவது அவளுடைய மனதை மாற்றுங்கள்’’ என்ற கூறிச் சென்றான். அரக்கியர்களும் சீதையைப் பலவாறு மிரட்டினர், சீதையும் மிக்க மனம் வருந்திச் சலிப்படைந்துத் தற்கொலை செய்து கொள்ளத் துணிந்தாள். “அற்புதன் அரக்கர் தம் வருக்கம் ஆசற வில்பணி கொண்டு அரும் சிறையின் மீட்ட நாள் இல்புகத் தக்கலை என்னின், யான் உடைக் கற்பினை எப்பரிசு இழைத்துக் காட்டுகேன்?” என்று கருதி ஆதலால் இறத்தலே அறத்தின் ஆறு' என்று கூறி இறக்கத் துணிந்தாள். அப்போது அனுமன், “அண்ட நாயகன் அருள் தூதன்யான்” என்று கூறிக் கொண்டு சீதை முன் தோன்றினான். 'இராமன் ஆணையால் இங்கு வந்துள்ளேன்’ என்று குறிப்பிட்டு எல்லா விவரங்களையும் சீதையிடம் கூறினான். அவளுடைய சந்தேகங்களை நீக்கினான். கணையாழியைக் கொடுத்தான். சீதை அனுமனிடம் நீ கடலை எவ்வாறு கடந்தாய் என்ற கேட்டாள். அனுமன் தனது உலகப் பெருவடிவத்தைக் காட்டினான். 'வஞ்சி அம்மருங்குல் அம்மறுவில் கற்பினாள் கஞ்சமும் புரைவன கழலும் கண்டினாள்; துஞ்சினர் அரக்கர் என்று உவக்கும் சூழ்ச்சியாள் அஞ்சினென் இவ்வுரு அடக்குவாய்' என்றாள். அனுமன் தனது பேருருவைச் சுருக்கிக் கொண்டான்.